அடுத்த தேர்தலில் இது நிச்சயம் நடக்கும்.. பொடி வைத்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா..! என்ன மேட்டர்..?

a1775

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், வரவிருக்கும் தேர்தலில் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் மு.க. ஸ்டாலின் இருவரும் இணைந்து போட்டியிடுவார்கள் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளது புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.


சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், திமுக மற்றும் அதிமுக இடையே எதிர்காலத்தில் கூட்டணி உருவாகும் சூழல் ஏற்படலாம் என்று கூறியுள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. மேலும், ஓ. பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்து திமுகவில் இணைந்தால் அது குதிரை பேரம் ஆகுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தான் தலைமைச் செயலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றவில்லை என்றும், பதவியை விட்டு விட்டு பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்திற்கே நேரடியாக வந்து கட்சியில் இணைந்ததாகவும் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.அதேபோல், திமுக அரசு குறித்து கடுமையாக விமர்சித்த அவர், பாஜக மற்றும் அதிமுகவுடன் இணைந்து மக்கள் தீர்ப்புக்கு எதிரான ஆட்சியை திமுக உருவாக்க முயன்றது என்றும் கூறியுள்ளார்.

மு.க. ஸ்டாலின் தோல்விக்குக் காரணம் அவரது குடும்பத்தினரான உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் ஆகியோர் என்றும், ஊழல் மற்றும் பண அரசியலால் மக்கள் அதை நிராகரித்துவிட்டனர் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அதிமுக நிர்வாகிகள் த.வெ.க.வில் இணைய வரவேற்கப்படுவார்கள் என்றும், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் கொள்கைகளை தலைவர் விஜய் முன்னிலைப்படுத்துவதால் அவர்களின் தொண்டர்கள் எப்போதும் வரவேற்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Read more: அமைதி பேச்சுவார்த்தைக்கு நடுவே அமெரிக்கா திடீர் தாக்குதல்.. ஹார்மூஸ் ஜலசந்தியில் மீண்டும் பதற்றம்..!

English Summary

This will definitely happen in the next election.. Minister Adhav Arjuna spoke with powder..! What’s the matter..?

Next Post

அய்யோ.. என் கணவரை காணோம் சார்! போலீஸ் ஸ்டேஷனில் கதறி அழுத மனைவி.. விசாரணையில் பகீர்!

Tue May 26 , 2026
தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் கங்காபூர் பகுதியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்தியம் ரெட்டி மற்றும் கல்பனா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கல்பனா நாராயண்கேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்துள்ளார். அங்கு பணியாற்றிய சிண்டு என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த உறவால் கணவர் தடையாக இருப்பதாக கருதிய கல்பனா, தனது காதலன் சிண்டுவுடன் சேர்ந்து […]
affair murder 1

You May Like