அஜர்பைஜானின் பாகுவில், கடந்த ஜூலை 30ஆம் தேதில் முதல் செஸ் உலகக் கோப்பை 2023,வெகு விமர்சையாகத் தொடங்கி நடைபெற்று வந்தது. மொத்தம் 206 வீரர்கள் பங்குபெற, ஒற்றை-எலிமினேஷன் விளையாட்டு முறையில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயது கிராண்ட்மாஸ்டர் (ஜிஎம்), ஆர். பிரக்ஞானந்தா பங்குபெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப்போட்டியில் உலக நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனுடன் பிரக்ஞானந்தா மோதினார். இறுதிப் போட்டியில் முதல் 2 சுற்று போட்டிகளும் சமனில் முடிந்த நிலையில் டைபிரேக்கர் சுற்று நேற்று நடைபெற்றது. கார்ல்சன் – பிரக்ஞானந்தா இடையே நடைபெற்ற டை பிரேக்கர் முதல் சுற்றில் கார்ல்சன் வெற்றிபெற்றார். அதனை தொடர்ந்து நடைபெற்ற டை பிரேக்கர் இரண்டாவது சுற்று சாமானில் முடிந்ததால் மகுடம் சூடினார் கார்ல்சன். 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் மாக்னஸ் கார்ல்சன். வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா 2வது இடம் பிடித்தார்.
இந்நிலையில் செஸ் உலகின் நம்பர் 1வீரரான மாக்னஸ் கார்ல்சனுடன் போராடி 2ஆம் இடம் பிடித்த சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவுடன் வீடியோ காலில் பேசி தன்னுடைய வாழ்த்துக்களை கூறினார் முதல்வர் ஸ்டாலின். பிரக்ஞானந்தாவுடன் வீடியோ காலில் முதல்வர் பேசியதாவது “தம்பி நல்லா இருக்கிங்களா.. ரொம்ப ஆவலோடு இருந்தேன், எப்படியோ டிரா பண்ணிடீங்கா.. நல்ல ட்ரை..”பரவால்ல, பரவால்ல அதுல என்ன இருக்கு, இவ்ளோ தூரம் வந்ததே பெரிய சாதனை தான்.. நீங்க எதுக்கும் கவலை பட வேண்டாம், கண்டிப்பா அடுத்த முறை நீங்க தான் வருவீங்க, என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள். அம்மா நல்ல இருக்காங்களா” என்று பிரக்ஞானந்தா அம்மாவிடம் நலம் விசாரித்தார் முதல்வர். பிறகு பிரக்ஞானந்தாவிடம் ” சென்னை வரப்போ சொல்லுங்க விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி உங்களை பார்க்க வருவாரு, அதுக்கு அப்புறம்என்னை வந்து பாருங்க நான் கண்டிப்பா உங்களை பாக்குறான் என்று கூறினார் முதல்வர் ஸ்டாலின்.
முன்னதாக “உலக #2 நகமுரா மற்றும் #3 கருவானாவை தோற்கடித்து, இறுதிப் போட்டிக்கான உங்கள் பயணம் எங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இறுதி முடிவு இருந்தபோதிலும், உங்கள் சாதனை 140 கோடி கனவுகளுடன் எதிரொலிக்கிறது. முழு தேசமும் உங்களை நினைத்து பெருமை கொள்கிறது, #பிரக்ஞானந்தா!” என்று வாழ்த்துக்கள் கூறி முதல்வர் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.