fbpx

Donald Trump | நீதிமன்றத்தில் சரணடைந்தார் டிரம்ப்..!! பரபரத்த கோர்ட்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

தேர்தல் முறைகேடு வழக்கில் அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) அட்லாண்டா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

அமெரிக்க அதிபராக கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வந்த டிரம்ப், 2020இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார். இருப்பினும், தேர்தல் வெற்றியை ஜோ பைடன் தன்னிடமிருந்து திருடிக்கொண்டதாக டிரம்ப் குற்றம்சாட்டினார். இந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு சான்றளிக்கும் நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் கடந்த 2021 ஜனவரி 6ஆம் தேதி நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியை நடத்த விடாமல் டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தில் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகளை கொலம்பியா நீதிமன்றம் இந்த மாதத் தொடக்கத்தில் உறுதி செய்தது. இந்நிலையில், தங்கள் மாகாணத் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஜார்ஜியா நீதிமன்றமும் உறுதி செய்தது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், நீதிமன்றத்தில் சரணடைவதாக கூறியிருந்தார். அந்தவகையில், அமெரிக்க நேரப்படி 24ஆம் தேதி இரவு, அட்லாண்டா சிறையில் சரணடைந்தார். அப்போது சிறை அதிகாரிகள் அவரது அடையாளங்களை குறித்தனர். பின்னர் 2 லட்சம் அமெரிக்க டாலர் பிணையாக செலுத்திய பின் அவர் விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்டதும், உடனடியாக விமானம் மூலம் நியூஜெர்சி புறப்பட்டு சென்றார்.

Chella

Next Post

Union Bank of India வங்கியில் வேலைவாய்ப்பு அறிமுகம்…! ரூ.30,000 மாத ஊதியம்…!

Fri Aug 25 , 2023
யூனியன் பேங்க் ஆப் வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Hockey coaching பணிகளுக்கு என ஏராளமான காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Hockey India Level ‘2’ சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.30,000 வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக […]
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

You May Like