ஏழுமலையானின் கடன் பிரச்சனையை தீர்த்த தலம்.. ஒரு முறை சென்றால் உங்கள் பிரச்சனையும் தீரும்..!! எங்க இருக்கு தெரியுமா..?

vengatesa

திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்று சொல்வார்கள். அப்படி திருப்பதி ஏழுமலையானின் மறு உருவமாக அமைந்திருக்கும் ஒரு கோவில் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


திருப்பதி ஏழுமலையான் என அழைக்கப்படும் ஸ்ரீனிவாச பெருமாள், திருமணத்திற்காக குபேரனிடம் பெற்ற கடனுக்காக ஒரு கட்டத்தில் பெரும் நெருக்கடிக்கு உள்ளானார். அப்போது அந்த கடன் பிரச்சனையைத் தீர்த்து வைத்த புனிதத்தலம் தான் சில்பூர் புகுலு வெங்கடேஷ்வர சுவாமி கோவில். இந்த கோவில் தெலுங்கானா மாநிலம் ஜனகமா மாவட்டத்தில் சில்பூர் கிராமத்தில் அமைந்துள்ளது.

மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தப் பழமையான கோவிலில், ஸ்ரீனிவாச பெருமாள் தவம் செய்த புனித இடம் இருப்பதாக நம்பப்படுகிறது. இங்கு பூஜை செய்யும் பக்தர்களின் கடன் பிரச்சனை, பணக்கழிவு, பயம், பதட்டம், எதிரிகளின் தொல்லை போன்றவை நீங்கி, வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும் என்று பக்தர்கள் பக்தியோடு கூறுகின்றனர்.

வெங்கடேஷ்வர சுவாமி தவம் செய்த இந்த மலை அடிவாரத்தில் பெருமாளுக்கு கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இங்குள்ள மூலவருக்கு புகுலு அல்லது குபுலு வெங்கடேஷ்வர சுவாமி என்று பெயர். புகுலு அல்லது குபுலு என்றால் தெலுங்கில் பயம், பதற்றம் என்று அர்த்தம். பெருமாள் பதற்றமான நிலையில் வந்து தவம் செய்ததால் இப்பெயர் உண்டாயிற்று.

மலை அடிவாரத்தில் பெருமாள் பாதம் பதித்த இந்த இடத்திற்கு பாதாள குண்டு என்றும், பாறையால் ஆன இந்த மலைக்கு சில்புர்குட்டா என்றும் பெயர். இந்த கோவிலுக்கு வந்து எவர் ஒருவர் வழிபட்டாலும் அவர்களின் கடன் பிரச்சனை, பணப்பிரச்சனை, பயம், பதற்றம், எதிரிகள் தொல்லை ஆகியவை நீங்கி, வாழ்க்கையே மாறி விடும் என்கிறார்கள். தென்னிந்தியாவில் உள்ள மிக பழமையான கோவில்களில் இந்த கோவிலும் ஒன்று. ஆண்டுதோறும் இக்கோவிலில் பிரம்மோற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

எப்படி செல்வது? சில்பூர் புகுலு வெங்கடேஷ்வர சுவாமி கோவில், ஐதராபாத்தில் இருந்து 120 கி.மீ., தூரத்திலும், வாரங்கள் நகரில் இருந்து 30 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ளது. திருப்பதி, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து இக்கோவிலுக்கு செல்வதற்கு ரயில் மற்றும் பஸ் வசதி உள்ளது.

Read more: பிரஷர் குக்கரில் சமைத்த சாதம் உடலுக்கு நல்லதா.. கெட்டதா..? – அவசியம் தெரிஞ்சுக்கோங்க..

Next Post

வார விடுமுறை... தமிழக அரசு சார்பில் 925 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு...! உடனே புக் செய்யவும்...!

Thu Jun 26 , 2025
வார விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் 925 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வார இறுதி நாட்களையொட்டி 27, 28-ம் தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 595 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, […]
TN Bus 2025 1

You May Like