fbpx

இவங்க யாருன்னு அடையாளம் தெரியுதா..! இளம் ஹீரோயின்களுடனே போட்டி போடும் அளவு, லுக்கை மாற்றிய 90ஸ் கனவுக்கன்னி..!

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை குஷ்பூ. தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். குஷ்பூ உச்சத்தில் இருந்த சமயத்தில் இவருக்காக ரசிகர்கள் திருச்சி அருகே கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினர். ஒரு நடிகைக்கு கோயில் கட்டப்பட்டது இதுவே முதன்முறை. மேலும் இவரது பேரில் இட்லி விற்பனையும் தொடங்கி தற்போது வரை தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளது. அந்த அளவுக்கு பிரபலமான நடிகையாக வளம் வந்தவர் குஷ்பூ. கடந்த 2000 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

நடிகை குஷ்பு தற்போது சினிமா, அரசியல், மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி என பலவற்றிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருந்து வரும் குஷ்பு, தற்போது உடல் எடையை குறைத்து லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தலைமுடியை கட் செய்து விட்டு, பாப் கட்டிங்-ல் இருக்கும் போட்டாக்களுடன் மாற்றம் ஒன்றே மாறாது என்று பதிவிட்டுள்ளார்.

இந்த புது லுக் புதிய படத்திற்கான தோற்றமா அல்லது புது சீரியல் கெட்டப்பா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலரோ வெவ்வேறு ஹீரோயின்கள் பெயரை குறிப்பிட்டு அவரது போட்டோவா என்று கேள்வி கேட்டு வருகின்றனர். மேலும் சிலர் ஹாலிவுட் ஹீரோயின் போல இருக்கீர்கள் என்று வர்ணித்து வருகின்றனர். தற்போது 52 வயதாகும் நடிகை குஷ்பூவின் புதிய போட்டோக்கள் இளம் நடிகைகளுக்கே சவால் விடும் அளவுக்கு இருப்பதாக, ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Kathir

Next Post

”இனி இந்த பறவைகளை நம்மால் பார்க்கவே முடியாது”..!! ஆய்வு முடிவில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Sun Aug 27 , 2023
இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் 942 பறவை இனங்களின் நிலை பல்வேறு வகைகளில் சரிவை பிரதிபலிக்கிறது. இதில் 178 பறவை இனங்கள் அதிக பாதுகாப்பு அக்கறை கொண்ட வகையில் உள்ளன. ஸ்டேட் ஆஃப் இந்தியா பறவைகள் 2023ஆம் ஆண்டின் அறிக்கை வெளியாகியுள்ளது. இது இந்தியாவில் உள்ள பறவைகளின் எண்ணிக்கை, பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ‘பாதுகாப்பு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் வைக்கப்பட வேண்டிய அழிந்து வரும் இனங்கள் […]

You May Like