இந்திய குடிமக்கள் மீது சவுதி அரேபியா விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளதா?. உண்மை என்ன?

saudi arabia visa ban 11zon

இந்திய குடிமக்கள் சவுதி அரேபியாவுக்கு பயணம் செய்வதற்கு எந்த தடையும் இல்லை. தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தவறானவை. இந்த விஷயத்தில் சவுதி அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.


மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியா இந்தியா, இந்தோனேசியா, வங்கதேசம், எகிப்து, ஈராக், ஜோர்டான், மொராக்கோ, நைஜீரியா, எத்தியோப்பியா, சூடான், துனிசியா, அல்ஜீரியா, பாகிஸ்தான், ஏமன் ஆகிய 14 நாடுகளுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியானது. சவுதி அரேபியாயில் பல லட்சக்கணக்கான இந்தியர்கள் பணி புரிந்து வரும் நிலையில், அந்த நாடு பயண கட்டுப்பாடுகளை விதித்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், இந்தியர்கள் சவுதி அரேபியாவுக்கு பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தவறானவை. இந்த விஷயத்தில் சவுதி அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெளிவுபடுத்தியபடி, ஹஜ் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு பக்தர்களை ஒழுங்குபடுத்தவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் குறுகிய கால விசாக்களில் தற்காலிக கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்படுகின்றன. இது ஹஜ் காலத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு நிலையான நடவடிக்கை என்று கூறப்பட்டுள்ளது.

அத்தியாவசியமற்ற பயணங்களைக் கட்டுப்படுத்துதல், புனித தலங்களுக்குள் அங்கீகரிக்கப்படாத நுழைவுகளுக்கு அபராதம் விதித்தல் மற்றும் பதிவுசெய்யப்பட்ட யாத்ரீகர்களை நிர்வகிப்பதில் வளங்களை மையப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிட்ட அளவிலான விசாக்களை சவுதி அரேபியா வழங்கி வரும் நிலையில், விசா கட்டுப்பாடுகள் இன்றி ஏராளமானோர் சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் மரணம் அடைந்த சோக சம்பவங்கள் நிகழ்ந்தன. இதை தடுக்கும் வகையிலேயே ஹஜ் பயண காலத்தில் மட்டும் வொர்க் விசா, உம்ரா, பிஸ்னஸ் மற்றும் குடும்ப விசாவை சவுதி அரேபியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது தொடர்பாக சவுதி அரேபியா எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: 90களில் ரூ.1லட்சத்துக்கு தந்தை வாங்கிய பங்கு!. இன்று ரூ. 80 கோடிக்கு அதிபதியான மகன்!. எப்படி தெரியுமா?. வைரல் பதிவு!

KOKILA

Next Post

தினமும் சிக்கன் சாப்பிடுகிறீர்களா..? இதய நோய் ஆபத்து அதிகரிக்கும்..!! - எச்சரிக்கும் நிபுணர்கள்

Tue Jun 10 , 2025
சிக்கன் பிடிக்காதவர்களே இல்லை. ஞாயிற்றுக்கிழமை என்றால், சிக்கன் வகைகள் கண்டிப்பாக இருக்கும். ஆனால், அடிக்கடி சிக்கன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதா.. இல்லையா என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. தினமும் சிக்கன் சாப்பிட்டால் என்ன நடக்கும்? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே பார்ப்போம். கோழி இறைச்சியில் புரதச்சத்து அதிகம். பொதுவாக, வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை கோழி இறைச்சி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால், தினமும் அதை […]
chicken 1

You May Like