fbpx

இனி அதிவேக பயணம், குடிபோதையில் வாகனம் ஓட்டினால் லைசென்ஸ் ரத்து..!! இன்னும் லிஸ்ட் இருக்கு..!!

உங்கள் ஓட்டுநர் உரிமம் கீழே கொடுக்கப்பட்டுள்ள 7 காரணங்களுக்காக ரத்து செய்யப்படலாம்.

போக்குவரத்து விதிகளில் அரசு மிகவும் கண்டிப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே, வீட்டிலிருந்து வாகனங்களை எடுக்கும் போது ஆவணங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா? என்பதை கட்டாயம் சோதித்துக் கொள்ளுங்கள். போலீசாரிடம் பிடிபட்டால், உங்கள் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் 2017ஆம் ஆண்டு 2016 மோட்டார் வாகனச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதில் பல புதிய திருத்தங்கள் செய்யப்பட்டன. மோட்டார் வாகனச் சட்டத்தின் 206-வது பிரிவில் திருத்தம் செய்யப்பட்ட பிறகு, கீழே கொடுக்கப்பட்டுள்ள குற்றங்களுக்காக உங்களது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

* நீங்கள் வாகனம் ஓட்டும்போது மற்ற வாகன ஓட்டிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்தால், அது ஆபத்தான வாகனம் ஓட்டுவதாகக் கருதப்படும். இருசக்கர வாகனத்தில் ஸ்டண்ட் செய்வது கூட பொது சாலைகளில் ஆபத்தானதாக கருதப்படுகிறது.

* அதிவேகமாக வாகனம் ஓட்டினால் அபராதம் மட்டுமின்றி, ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும். இந்த உரிமை போலீசாருக்கு உண்டு.

* குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றம். அப்படி வாகனம் ஓட்டும்போது பிடிபட்டால், ரூ.10,000 அபராதத்தை செலுத்த வேண்டியிருக்கும். அதே சமயம், போலீசார் உங்களது ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது.

* நீங்கள் சாலையில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவதை போலீசார் கண்டுபிடித்தால், ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யும் சாத்தியக்கூறுடன் அதிக அபராதமும் விதிக்கப்படலாம்.

* சிவப்பு சிக்னலைக் கடப்பதாலும், உங்கள் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படலாம்.

* மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இரு சக்கர வாகனத்தில் 3 பேர் அமர்ந்து செல்வதும் குற்றம்.

* பொது சாலைகளில் பைக் ரேசில் ஈடுபட்டால், அபராதம் விதிக்கப்படுவதோடு, சிக்கினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது.

* ஹெல்மெட் அணியாமல் செல்லும்போது, போலீசாரிடம் பிடிபட்டால், ரூ.1,000 அபராதத்துடன் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Chella

Next Post

நீங்கள் மத்திய அரசு ஊழியரா..? ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு..? வெளியான முக்கிய தகவல்..!!

Sun Aug 27 , 2023
அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வு பெறும் வயதில் மத்திய அரசு அவ்வப்போது பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மீண்டும் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்களின் ஓய்வு வயதை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் தினேஷ் காராவுக்கு பதவி நீட்டிப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், அவரது ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், பொதுத்துறை வங்கிகள் […]

You May Like