37 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படவுள்ள பிரமாண்டமான கதவுகள்..! களைகட்டும் திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா…

thiruchendur temple

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக, 37 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கு வாசல் கதவு திறக்கப்பட உள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் கடற்கரையை ஒட்டியவாறு அமைந்துள்ள திருச்செந்தூர் முருகன் கோயில், வருகிற ஜூலை 7ஆம் தேதி நடைபெறவுள்ள மகா குடமுழுக்கு விழாவுக்காக மிகுந்த விமர்சையாக தயாராகி வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு, கடந்த 37 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த மேற்கு வாசல் கதவு இம்முறை திறக்கப்பட உள்ளது.


திருச்செந்தூரில் 300 கோடி ரூபாய் மதிப்பில் கோயில்த் திருப்பணி மற்றும் வளாக மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த குடமுழுக்கு விழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. மேலும் சிறப்பு ரயில்களும் இயக்கப்படவுள்ளது.

பெரும்பாலான கோயில்களில் பொதுவாக ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமையும். ஆனால், திருச்செந்தூரில் கிழக்கு திசையில் கடல் இருப்பதால், கோபுரம் மேற்குப் புறமாக கட்டப்பட்டுள்ளது. அந்த மேற்குவாசல், கடந்த 1988ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டுள்ளது. 30 அடி உயரமுள்ள இந்த கதவுகள் மற்றும் சுற்றுச்சுவர்கள் புதுப்பிக்கப்பட்டு தற்போது விழாவுக்குத் தயாராகியுள்ளன.

1988ற்கு முன் பக்தர்கள், மேற்குவாசல் வழியாகவே சுவாமியை தரிசித்து வந்தனர். ஆனால், இவ்வாசல், மூலஸ்தானத்தின் பீடத்தை விட உயரமாக இருப்பதால் இருப்பதால் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மேற்கு வாசல் கதவுகள் மரத்தால் ஆனவை. வழக்கமாக, ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவில், முருகனின் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டுமே இந்த வாசல் திறக்கப்படும்; ஆனால் அப்போது கூட பக்தர்களுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படாது.

இப்போது, பெருமை மிக்க இந்த மேற்குவாசல், 37 வருடங்களுக்குப் பிறகு மகா குடமுழுக்கு நாளில் திறக்கப்படுகிறது. எனினும், தற்போதைய திட்டமின்படி, கலச ஊர்வலத்திற்காக மட்டுமே இது பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பக்தர்கள் இந்த வழியாக தரிசனம் செய்யும் வாய்ப்பு அளிக்கப்படுமா என்பதை பற்றிய தகவல் விரைவில் அறிவிக்கப்படும்.

Read More: சனியின் கெடு பார்வையை நீக்கும் ஏகாம்பரேஸ்வரர் கோவில்.. எங்க இருக்கு தெரியுமா..?

Newsnation_Admin

Next Post

குட்நியூஸ்!. அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை!. எவ்வளவு தெரியுமா?.

Tue Jul 1 , 2025
சர்வதேச சந்தையில் நிலவிவரும் கச்சா எண்ணையின் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட அவற்றின் அடிப்படையில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. மாதம் தோறும் வணிக சிலிண்டரின் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தொடர்ந்து 3வது மாதமாக வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது மே மாத தொடக்கத்தில் கூட, நிறுவனங்கள் சிலிண்டருக்கு ரூ.14.50 விலையைக் குறைத்திருந்தன. […]
cylinder price 11zon

You May Like