வாரா வாரம் வெள்ளிக்கிழமைகளில் புதுப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும். கடந்த வாரம் வெளியான படங்கள் சுமாரான வரவேற்பை பெற்ற நிலையில், இன்று வெளியாகும் படங்களுக்கு மக்களிடையே வரவேற்பு இருக்குமா என்ற கவலையில் தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் உள்ளனர். அந்த வகையில் இன்றைய தினம் 3 முக்கிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.
3BHK: தமிழ் சினிமா அதிரடி சண்டை காட்சிகள் கொண்ட படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற காலம் மறைந்து போய், தற்போது பீல் குட் படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இன்று 3 BHK படம் வெளியாக உள்ளது. ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத், சைத்ரா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கணவன் மனைவியான சரத்குமார் மற்றும் தேவயானிக்கு சித்தார்த், மீதா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சென்னையில் வசித்து வரும் இந்த குடும்பத்தின் ஒரே கனவு சொந்த வீடு வாங்குவது தான். இதற்காக சிறுக சிறுக பணத்தை சேர்த்து வைக்கின்றனர். ஆனால் எதிர்பாராத விதமாக ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு செலவு வருகிறது. இவை அனைத்தையும் கடந்து இறுதியில் அவர்கள் சொந்த வீடு வாங்கினார்களா? இல்லையா? என்பது தான் 3 BHK படத்தின் கதை.
பறந்து போ: ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ், அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பறந்து போ’. குழந்தை வளர்ப்பை விட குழந்தைகளை வளர்க்க பெற்றோர்கள் எப்படி வளர வேண்டும், வாழ வேண்டும் என்கிற கருத்தை கையமாக கொண்டு ஒரு நல்ல ஃபீல் குட் படமாக இந்த படம் அமைந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.
படத்தின் கதை என்னவென்றால், கோகுல் (மிர்ச்சி சிவா) மற்றும் அவரது மனைவி கிரேஸ் ஆண்டனி இருவரும் வேலைக்கு செல்வதால், அவர்களுடைய மகன் அன்புவை (மிதுல் ரியான்) வெளியே அனுப்பாமல், எப்போதுமே வீட்டிலேயே அடைத்து வைக்கின்றனர். ஆன்லைன் கிளாஸ் என மற்றவர்களுடன் பழகும் வாய்ப்பு இல்லாமல் வளரும் சிறுவனை மையமாக கொண்டு இந்த படம் அமைந்துள்ளது. குழந்தை வளர்ப்பு எந்தளவுக்கு முக்கியம். அதற்கு முதலில் நாம் பெற்றோர்களாக வளர்ந்து விட்டோமா? என்பதை புரிய வைக்கக் கூடிய பாடமாகவே இந்த பறந்து போ படம் அமைந்திருக்கிறது.
பீனிக்ஸ்: விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள படம் தான் ஃபீனிக்ஸ் . ஸ்டண்ட் இயக்குனர் அனல் அரசு இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் பீனிக்ஸ் படத்தில் வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன், மூனர் ரமேஷ், அபினக்ஷத்ரா, வர்ஷா, நவீன், ரிஷி, நந்தா சரவணன், முருகதாஸ், விக்னேஷ், ஸ்ரீஜித் ரவி ஆகியோர் இந்த நடித்துள்ளார்கள். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
கதையின் நாயகன் சூர்யா விஜய் சேதுபதி ஒரு எம்எல்ஏ கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறார்களின் சிறைக்கு அனுப்பப்படுகிறார். அங்கு அவர் மீது பல முறை கொலை முயற்சிகள் நடக்கின்றன. அதில் இருந்து அவர் எப்படி தப்பித்தார்? கொலைக்கான காரணம் என்ன என்பதை பற்றி சுவாரஸ்யமாக சொல்லி இருக்கும் படம் தான் பீனிக்ஸ்.
Read more: Tn Govt: 58 வயது கடந்த விளையாட்டு வீரர்களுக்கு ரூ.6,000 ஓய்வூதியம்…! எப்படி பெறுவது…?