ஒசி சமோசாவுக்காக பாலியல் வழக்கை முடித்து வைத்த போலீசார்.. குட்டு வைத்த POCSO நீதிமன்றம்..!!

15055781 samosa

பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியின் கடைகளில் இருந்து சமோசாக்களை லஞ்சமாக வாங்கி கொண்டு வழக்கை முடித்து வைத்ததாக சிறுமியின் தந்தை மனுதாக்கல்.


கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதி அன்று 14 வயது சிறுமி ஒருவர் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வீரேஷ் என்பவர் சிறுமியை பக்கத்தில் உள்ள வயலுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு கிராமத்தை சேர்ந்த இரண்டு பேர் வருவதை அறிந்த வீரேஷ், சிறுமியை தாக்கி, சம்பவத்தை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

நடந்த சம்பவத்தை சிறுமி தனது தந்தையிடம் கூறவே, போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே ஒரு தலை பட்சமாக நடந்து கொண்ட போலீசார், குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் சிறுமி கடனுக்கு சமோசா கேட்டதாகவும், மறுத்ததால், பழிவாங்கும் நோக்கில் பொய்யான வழக்கைப் பதிவு செய்ததாகவும் கூறி வழக்கை முடித்து வைத்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் தந்தை எதிர்ப்பு மனுவை தாக்கல் செய்தார். சம்பவ இடத்தில் இருந்து நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்யவில்லை என்று அதில் எழுதப்பட்டிருந்தது. மேலும் விசாரணை அதிகாரி, குற்றம் சாட்டப்பட்டவரின் கடையில் இருந்து ஆறு சமோசாக்களை லஞ்சமாக வாங்கி கொண்டு வழக்கை முடித்து வைத்ததாக குற்றம் சாட்டினார். போலீசின் விசாரணை அறிக்கையை ரத்து செய்து விரிவான விசாரணை மேற்கொள்ள POCSO நீதிமன்றம் உத்தரவிட்டது.

Read more: அஜித் மரணம் ‘லாக் அப் டெத்’ கிடையாது.. சாத்தான்குளம் சம்பவத்தோடு ஒப்பிடாதீங்க..!! – அமைச்சர் ரகுபதி

Next Post

#Breaking : கொலைகாரர் கூட இப்படி செய்யமாட்டார்.. உடனடியாக நீதி விசாரணை தொடங்க வேண்டும்.. அஜித் மரண வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

Tue Jul 1 , 2025
அஜித் குமார் மரண வழக்கில் மதுரை மாவட்ட நீதிபதி உடனடியாக நீதி விசாரணை உடனடியாக தொடங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.. சிவகங்கை லாக் அப் மரணம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று காலை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் “ புலனாய்வு செய்வதற்கே காவல்துறை, அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? முழு உண்மையையும் சொல்ல […]
newproject10 1751267698

You May Like