வாட்ஸ்அப் மெசஞ்சரில் பயனர்கள் படிக்காத மெசேஜ்களை ‘மெட்டா ஏஐ’ மூலம் சுருக்கமாக மாற்றித் தரும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
இன்றைய டிஜிட்டல் உலகில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போன்கள் மற்றும் சமூக ஊடக செயலிகளை பரவலாகப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, வாட்ஸ்அப் செயலி என்பது பெரும்பாலானோரின் அன்றாட தொடர்பு தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கியமான மத்தியானமாக அமைந்துள்ளது.
மெட்டா நிறுவனம், வாட்ஸ்அப் பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கத்தில் புதிய அப்டேட்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அண்மையில், வாட்ஸ்அப்பில் வீடியோவை நேரடியாக அனிமேஷன் ஸ்டிக்கராக மாற்றும் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம், உங்கள் வீடியோக்களை நேரடியாக ஸ்டிக்கர்களாக மாற்றி நண்பர்களுடன் பகிர முடியும்.
மேலும், வாட்ஸ்அப் வீடியோ கால் அம்சத்தில் 6 புதிய எஃபெக்ட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது உங்கள் வீடியோ கால்களை இன்னும் ரசனையுடன் மாற்றும் வகையில் உள்ளது. அந்த வகையில் whatsapp மெசஞ்சரில் பயனர்கள் படிக்காமல் விட்ட மெசேஜ்களை மெட்டா AI மூலம் சுருக்கி தரும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் whatsapp பயனர்கள் படிக்காமல் இருக்கும் நீண்ட மெசேஜ்களை சுருக்கமாக மாற்றி தரும். அதனை சுருக்கமாக படித்துக் கொள்ளலாம். இந்த அம்சத்தை whatsapp பயனர்கள் கேட்டால் மட்டுமே அதை செய்யும். மேலும் இவ்வாறு சுருக்கி தரும் மெசேஜ்கள், மெட்டா நிறுவனத்தின் சர்வர்கள் அல்லது whatsapp சிஸ்டத்தில் ஸ்டோர் ஆகாது என்றும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அம்சத்தை பயனர்கள் மேனுவலாக ‘சாட்’ செட்டிங்ஸில் ஆன் செய்தால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதைக்கு இந்த அம்சம் அமெரிக்காவில் வாட்ஸ்அப் பயனர்களுக்கு அறிமுகமாகி உள்ளது. மேலும், ஆங்கில மொழியில் உள்ள மெசேஜ்களை மட்டுமே இப்போதைக்கு மெட்டா ஏஐ சுருக்கி தருகிறது. வரும் நாட்களில் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் பயனர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தும் வகையில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more: முன்னாள் முதலமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடம்.. உடல் உறுப்புகள் செயல்படவில்லை..?