திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கூத்தூர் பாலம் மீது சென்று கொண்டிருந்த மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவலின்படி, தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து ஒன்று பழுதடைந்து நின்ற நிலையில் பஸ்சை மீட்டுக்கொண்டு மீட்பு வாகனம் ஒன்று பெரம்பலூரில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே கூத்தூர் மேம்பாலத்தில் வந்தபோது, அதே திசையில் வெல்ல மூட்டைகள் ஏற்றி வந்த லாரி பஸ்சின் பின்னால் மோதியது.
தொடர்ந்து லாரிக்கு பின்னால் வந்த மற்றொரு லாரியும் விபத்துக்குள்ளான லாரியின் பின்னால் மோதி கண் இமைக்கும் நேரத்தில் அடுத்து விபத்து ஏற்பட்டது. இதனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் 3 கிலோ மீட்டர் தொலைவு வரை அணிவகுத்து நின்றது.
விபத்து குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 5 மணி நேரம் போராடி, விபத்துக்குள்ளான அனைத்து வாகனங்களையும் அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் நிலைக்கு கொண்டு வந்தனர். மேலும் படுகாயம் அடைந்த லாரி டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Read more: ‘I LOVE YOU’ சொல்வதெல்லாம் பாலியல் வன்கொடுமை கிடையாது..!! – மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு