ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பிஎஃப் தொகையை யுபிஐ (UPI) வாயிலாக நேரடியாக பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகமாகியுள்ளது. அதனுடன், ரூ.5 லட்சம் வரை, தொகையின் பாதியை 72 மணி நேரத்துக்குள் தானாக அங்கீகரிக்கும் (Auto-approval) முறையும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்காக இனி வேலை செய்யும் நிறுவனத்தின் கையெழுத்தோ பிஎஃப்ஓ அலுவலகம் செல்ல வேண்டிய தேவை கிடையாது. இதற்கு ஆதார் எண், பேன் என்னும் வங்கி கணக்கும் உங்கள் யுஏ எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
முழுத் தொகை பெறும் நிபந்தனைகள்: முழு தொகையை பெறுவதற்கு நீங்கள் 58 வயதை கடந்திருக்க வேண்டும் அல்லது தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் வேலை இழந்திருக்க வேண்டும். இந்த இரண்டு மாத வேலை இழப்பு நிலைக்கேற்ப 75% வரை பணத்தை பெற அனுமதிக்கப்படுகிறது. மேலும் நிரந்தரமாக வெளிநாடு செல்லும் ஊழியர்கள் மட்டும் முழு தொகையையும் பெற முடியும்.
பாதி தொகையை பெற நிபந்தனைகள்: பாதி தொகையை எப்போது பெறலாம் என்றால் மருத்துவ சிகிச்சை, திருமணம், கல்வி,வீடு கட்டுதல் அல்லது வீடு கடனை திருப்பி செலுத்துவது போன்ற குறிப்பிட்ட காரணங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
பணம் பெறும் வழிகள்: இந்த பணம் திரும்ப பெறும் செயல் முறையை பிஎஃபோ இணையதளம் அல்லது உமாங் செயலின் மூலம் செய்து முடிக்கலாம். அதுமட்டுமல்லாமல் புதியதாக அறிமுகமான திடீர் இன்ஸ்டன்ட் உத்ரா முறையில் யுபிஐ ஐடியை வங்கி கணக்குடன் இணைத்து நேரடியாக பணத்தைபெறலாம். மேலும் பிஎஃப் கணக்கிலிருந்து பணம் பெறும்போது ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து சேவை செய்திருந்தால் எந்த வரியும் கிடையாது.
ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு பணத்தை பெறுகிறீர்கள் என்றால் பேன் கார்டு இருந்தால் 10% டிடிஎஸ் மற்றும் பேன் சமர்ப்பிக்காமல் இருந்தால் 30% டிடிஎஸ் பிடிக்கப்படும். எனினும் 50,000க்கும் குறைவாக திரும்ப பெறப்படும் பணத்திற்கு டிடிஎஸ் பிடிக்கப்படாது. EPFO-வின் இந்த புதிய நடைமுறை ஊழியர்களுக்குப் பாதுகாப்பான சேமிப்பை எளிதில், விரைவாகப் பயன்படுத்தும் வாய்ப்பை வழங்கி வருகிறது.
Read more: Rapido, Uber பைக் டாக்சிகளுக்கு மத்திய அரசு அனுமதி.. ஆனா ஒரு ட்விஸ்ட்..