சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெண்கள் தங்களது சகோதரர்களுக்கும், சகோதரர்களாக நினைப்பவர்களுக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக ஆண்களின் கைகளில் ராக்கி கயிறு கட்டி அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்துவார்கள்.
ரக்ஷா பந்தன் என்பது உடன்பிறப்புகளுக்கிடையே உள்ள உடைக்க முடியாத மற்றும் சிறப்பான பிணைப்பைக் கொண்டாடும் புனிதமான திருவிழா. இது ஆண்டுதோறும் சாவான் மாதம், பௌர்ணமி தினத்தில் வருகிறது. இந்நாளில், சகோதர சகோதரிகள் பல்வேறு சடங்குகள் மூலம் ஒருவருக்கொருவர் தங்களது அன்பைப் பரிமாறி, நான் இருக்கிறேன் என்று சகோதரிகளைக் கொண்டாடுகிறார்கள்.
மேலும், கைகளில் ராக்கி கட்டி, அவர்களின் நெற்றியில் திலகம் பூசி, அவர்களின் செழிப்புக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் பிரார்த்தனை செய்வார்கள். அப்போது, சகோதரர்கள் தங்கள் சகோதரிகளைப் பாதுகாப்பதாகவும், அவர்களை நேசிப்பதாகவும், அவர்களை வணங்குவதாகவும், அவர்களுக்குப் பரிசுகளை வழங்குவதாகவும் உறுதியளிக்கிறார்கள்.
இந்நிலையில், ரக்ஷா பந்தன் அன்று உங்கள் கையில் ராக்கி கயிறு கட்டும் சகோதரிக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்ற சில ஐடியாக்களை தற்போது பார்க்கலாம்.
பிடித்த ஆடைகள்:உங்கள் சகோதரிக்கு பிடித்தமான கலரில் பிடித்த உடைகளை வாங்கிக் கொடுத்து மகிழலாம். அது ஒருவகையில் உங்கள் சகோதரிக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
சாக்லேட்: ரக்ஷாபந்தன் அன்று கையில் ராக்கி கயிறு கட்டும் சகோதரிகளுக்கு சாக்லேட் கொடுக்கலாம். இது உறவில் இனிமையான உணர்வை ஏற்படுத்தும்.
ஹோட்டல்: இன்று ஒரு நாள் கிச்சனுக்கு விடுமுறை கொடுத்து, சகோதரியோடு உங்கள் அம்மாவையும் அவர்களுக்கு பிடித்த உணவகத்திற்கு அழைத்துச் சென்று அவர்களை ஆச்சர்யப்படுத்தலாம்.
சுற்றுலா டிக்கெட்: உங்களது சகோதரிக்கு பிடித்த இடத்திற்கு செல்வதற்கான டிக்கெட்டை பரிசாக கொடுக்கலாம். இந்த பரிசு இருவருக்கும் இடையிலான பந்தத்தை அதிகரிக்கும்.
போட்டோ ஆல்பம்: சிறு வயதில் மகிழ்ச்சியான நிகழ்வின் புகைப்படங்கள் அனைத்தையும் ஒரு ஆல்பமாக போட்டு உங்கள் சகோதரிக்கு பரிசாக கொடுக்கலாம்.
புத்தகங்கள்: தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் புத்தகங்கள் ஏராளமாக இருக்கின்றன. இதை கூட பரிசாக கொடுக்கலாம்.
மேக்கப் பொருட்கள்: பொதுவாகவே பெண்களுக்கு மேக்கப்பில் ஆர்வம் அதிகம். இதனால் மேக்கப் பொருட்களை கூட வாங்கிக் கொடுக்கலாம்.
நகைகள்: கம்மல், பிரஸ்லெட், வளையல் போன்ற நகைகளையும் பரிசாக கொடுக்கலாம். இது உறவில் தனித்துவமான பிணைப்பை உணர்த்தும்.
ஸ்மார்ட் வாட்ச்: சகோதரிகளுக்கு வாட்ச் பரிசாக கொடுப்பது சிறந்த முடிவாகும். அதுவும் சாதாரண வாட்ச்க்கு பதிலாக ஸ்மார்ட் வாட்சை பரிசாக கொடுத்தால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.