நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடைகளை களைய சொல்லி கண்காணிப்பாளர் சோதனை நடத்தியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் எழுதும் நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்வினை நாடு முழுவதும் ஏராளமான மாணவ, மாணவிகள் எழுதினர். சோதனைகளுக்கு பிறகே மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அந்தவகையில், கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு வந்த மாணவிகளின் உள்ளாடையை களைய சொல்லி சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதனால், மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர்கள் கொல்லம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கொல்லம் காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.