கிருஷ்ண ஜென்மபூமி – ஷாஹி ஈத்கா வழக்கில், எதிர்கால சட்ட நடவடிக்கைகளில் இக்தா மசூதியை “சர்ச்சைக்குரிய கட்டமைப்பு” என்று அதிகாரப்பூர்வமாக குறிப்பிடக் கோரிய மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்தகைய அறிவிப்பு இந்த விஷயத்தை முன்கூட்டியே தீர்ப்பளிப்பதாக இருக்கும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த விஷயத்திற்குத் தலைமை தாங்கிய நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, இந்த மனு “இந்த கட்டத்தில்” தள்ளுபடி செய்யப்படுவதாக வாய்மொழியாகக் குறிப்பிட்டார்.
இந்த மனு 2023 இல் வழக்கறிஞர் மகேந்திர பிரதாப் சிங் என்பவரால் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மேலும் பல வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர்.. இந்த 18 வழக்குகள் அனைத்தும் ஒன்றாக விசாரிக்கப்பட்டு வந்தது.
என்ன சர்ச்சை ?
மதுராவில் முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி இக்தா மசூதி தொடர்பாக நீண்டகாலமாக சட்ட மற்றும் மத தகராறு நிலவி வருகிறது.. மனுதாரர்கள் இந்த மசூதி கிருஷ்ணரின் அசல் பிறந்த இடத்தில் இருப்பதாகவும், ஏற்கனவே இருந்த ஒரு இந்து கோவிலை இடித்த பிறகு அது கட்டப்பட்டதாகவும் வாதிடுகின்றனர்..
1968 ஆம் ஆண்டு, கோயிலின் நிர்வாக அமைப்பான ஸ்ரீ கிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சன்ஸ்தான் மற்றும் டிரஸ்ட் ஷாஹி மசூதி இக்தா நிர்வாகம் இடையே ஒரு சமரசம் எட்டப்பட்டது.. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரண்டு மதத் தலங்களும் இணைந்து செயல்படவும் ஒரே வளாகத்தில் செயல்பட வழிவகுத்தது.. இருப்பினும், இந்த பல தசாப்த கால ஒப்பந்தம் இப்போது நீதித்துறை ஆய்வுக்கு உட்பட்டுள்ளது.
1968 சமரசத்தின் ஒப்பந்தத்தை எதிர்த்து பல வழக்கறிஞர்கள் புதிய வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். இது மோசடியாக செயல்படுத்தப்பட்டதாகவும், சட்டப்பூர்வ நிலைப்பாடு இல்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அந்த இடத்தில் தடையற்ற வழிபாட்டு உரிமை மற்றும் ஷாஹி ஈத்கா மசூதியை அகற்றுதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். மசூதி புனித ஜென்மபூமி நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.



