fbpx

BB Tamil 7 | ’இந்த 3 பேரும் ஏற்கனவே பிரபலம் ஆச்சே’..!! ’திரும்ப எதுக்கு வராங்க’..!! வெளியானது புதிய லிஸ்ட்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சி 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்த நிலையில், 7-வது சீசன் செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் மாதம் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 7 தொடர்பாக இதுவரை 2 ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அத்தோடு இந்த சீசனில் புதுப்புது டுவிஸ்ட் எல்லாம் எல்லாம் காத்திருக்கின்றது. அதாவது, இந்த முறை இரண்டு வீடு என்றும் இரண்டு பிக்பாஸ் என்றும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இதற்கிடையே, 7-வது சீசன் போட்டியாளர்கள் குறித்த பட்டியல் இணையத்தில் அவ்வபோது உலா வந்துக் கொண்டிருக்கிறது. அப்படி இன்றும் ஒரு லிஸ்ட் வந்துள்ளது. அதில் தொகுப்பாளினி பாவனா, கிராமிய பாடகி ராஜலட்சுமி ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமானவர்கள் தான். அத்தோடு ஷகீலா முக்கிய போட்டியாளராக கலந்து கொள்ளப் போவது உறுதியான தகவலாக வெளியாகியுள்ளது.

Chella

Next Post

அட்டகாசமான அறிவிப்பு..!! இனி குறைந்த விலையில் விமான டிக்கெட் புக்கிங் செய்யலாம்..!! கூகுளின் புதிய வசதி..!!

Thu Aug 31 , 2023
விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு அட்டகாசமான நியூஸை Google Flights வெளியிட்டுள்ளது. தற்போது இன்சைட்ஸ் (Insights) என்ற ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மிகவும் கட்டுபடியாகக் கூடிய விலையில் விமான டிக்கெட்களை புக் செய்வதற்கான சரியான நேரம் எது என்பது போன்ற பரிந்துரைகளை இந்த அம்சம் வழங்கும். இந்த பரிந்துரைகள் ஒரு குறிப்பிட்ட விமானத்தின் முந்தைய டேட்டாக்கள் அடிப்படையில் வழங்கப்படுகிறது. “ஒரு குறிப்பிட்ட வழிதடத்திற்கான முந்தைய சராசரி விலையுடன் ஒப்பிடுகையில் […]

You May Like