நீரிழிவு நோயைத் தடுக்கும் மருந்தான மெட்ஃபோர்மினை பயன்படுத்துவதைக் காட்டிலும், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுமுறையை உள்ளடக்கிய வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்வதே நீண்ட கால நன்மைகளை தருவதாக சமீபத்திய ஆய்வொன்றில் வெளிவந்துள்ளது. இந்த ஆய்வு பிரபல மருத்துவ இதழான தி லான்செட் டயபெட்ஸ் & எண்டோகரைனாலஜில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து பல்வேறு மருத்துவ நிபுணர்கள் 1996ம் ஆண்டு தொடங்கிய நீரிழிவு தடுப்பு திட்டத்தின் (Diabetes Prevention Program – DPP) கீழ் நடத்தியுள்ளனர். 22 அமெரிக்க மாநிலங்களில் உள்ள 30 மருத்துவ மையங்களிலிருந்து, முன்-நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 3,234 பேரை இந்த ஆய்வில் இணைத்தனர்.
முக்கிய முடிவுகள் என்ன?
* வாழ்க்கை முறை மாற்றங்கள் (சீரான உணவு + உடற்பயிற்சி) மூலம் நீரிழிவு நோய் வருவதை 24% வரை தடுக்க முடிந்தது.
* மெட்ஃபோர்மின் மருந்து பயன்படுத்தியவர்கள் அதைவிட குறைவாக, 17% வரை மட்டுமே தடுப்பு பெற்று இருந்தனர்.
* வாழ்க்கை முறை மாற்றம் மேற்கொண்டவர்கள், நீரிழிவை 58% வரை தடுக்க முடிந்தது.
* மெட்ஃபோர்மின் மருந்து எடுத்தவர்கள், 31% தடுப்பே பெற்றனர்.
வாழ்க்கை முறை மாற்றம் செய்தவர்கள், நீரிழிவு இல்லாமல் கூடுதலாக 3.5 ஆண்டுகள் வாழ்ந்தனர். மெட்ஃபோர்மின் மருந்து எடுத்தவர்கள் 2.5 ஆண்டுகள் நீரிழிவின்றி இருந்தனர். நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழகத்தின் மருத்துவர் வல்லப் ராஜ் ஷா கூறுகிறார். “வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொண்டவர்கள், 22 ஆண்டுகளுக்குப் பிறகும் நீரிழிவு நோய் வராமல் இருந்தது மிக முக்கியமான விஷயமாகும். மருந்தை விட வாழ்க்கை முறை மாற்றமே பலத்த பாதுகாப்பு அளிக்கிறது என்பதே உண்மை.”
நீரிழிவு வந்த பிறகும், மருந்துகளில் மட்டும் நம்பிக்கை வைக்காமல், வாழ்க்கை முறை திசையை மாற்றுவதன் மூலம், நீண்டகால நலத்தையும் உயிருக்கான தரத்தையும் மேம்படுத்த முடியும் என இந்த ஆய்வு முடிவுகள் காட்டுகிறது.
Read more: Alert: 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று… மீனவர்கள் கடலுக்கு செல்ல எச்சரிக்கை…!