தஞ்சாவூர் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் சுற்றுலா வந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் உதாரமங்கலம் அருகே தஞ்சாவூர் – விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில், நாற்றுகளை ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது சென்னையிலிருந்து தஞ்சைக்கு சுற்றுலா வந்த வாகனம்(கார்) எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த கோர விபத்தில் காரில் பயணித்த விஜயா என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை சேர்ந்த குமார் (52), துர்கா(32), நிவேனி சூர்யா (3) ஆகிய மூன்று பேரும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
குமாரின் மகள் மோனிஷா, மகன் ஸ்டாலின் மற்றும் சரக்கு வாகனம் டிரைவர் விக்னேஷ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more: இரயில்-பள்ளி வேன் விபத்து: மின் கம்பி அறுந்து ஒருவர் பலி..? அடுத்தடுத்து சோகம்..