fbpx

அச்சுறுத்தும் புதிய கோவிட்-19 மாறுபாடு BA.2.86!… தடுப்பூசி போட்டவர்களை தாக்கும் திறன்கொண்டவை!… அறிகுறிகள்!

புதிய கோவிட்-19 மாறுபாடு BA.2.86 அல்லது Pirola’ என்ற புனைப்பெயர் இந்த வகை வைரஸ் தடுப்பூசி பெற்ற நபர்களை தாக்கும் திறன் கொண்டவை என தகவல் வெளியாகியுள்ளது.

ஒமிக்ரானின் BA.2.86 பரம்பரையானது, XBB.1.5 உடன் ஒப்பிடுகையில் வைரஸின் முக்கிய பகுதிகளில் 35 க்கும் மேற்பட்ட பிறழ்வுகளைக் கொண்டிருப்பதால் உலக நாடுகள் மத்தியில் ஆர்வத்தை ஈர்த்துள்ளது. XBB.1.5, 2023 ஆம் ஆண்டின் மிகவும் தாக்கத்தை உண்டாக்கிய மாறுபாடு ஆகும். கனடா மற்றும் டென்மார்க், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளும் BA.2.86 மாறுபாட்டினால் ஏற்பட்ட தொற்றை உறுதிபடுத்தியுள்ளது.

கடந்த வாரம் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் அறிக்கையின்படி, BA.2.86 மாறுபாடு ஏற்கனவே கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட அல்லது கொரோனா தடுப்பூசிகளைப் பெற்ற நபர்களை தாக்கும் திறனை கொண்டது என தெரிவித்துள்ளது. BA.2.86 வைரஸ், ‘Pirola’ என்ற புனைப்பெயர் கொண்டது. உலக சுகாதார நிறுவனத்தால் இந்த மாறுபாடு (WHO) கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.

DA.2.86 மாறுபாட்டில் உள்ள பிறழ்வுகள் ஸ்பைக் புரதத்தில் 30 க்கும் மேற்பட்டவை அடங்கும். கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே BA.2.86 மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஒரு சில நாடுகளில் கழிவுநீரில் இந்த மாறுபாடு தென்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மாறுபாட்டைக் கண்காணிப்பது முக்கியம் என்றாலும், முந்தைய நோய்த்தொற்றுகள் மற்றும் தடுப்பூசிகளிலிருந்து உலகம் முழுவதும் இருக்கும் மக்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ள காரணத்தால் இந்த மாறுபாடு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றும், இறப்பு விகிதமும் இருக்காது என உலக சுகாதார மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Pirola அறிகுறிகள்: மூக்கு ஒழுகுதல், தலைவலி, சோர்வு, தும்மல், தொண்டை வலி, காய்ச்சல் ஆகியவை BA.2.86 மாறுபாட்டின் அறிகுறிகளாகும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அறிக்கைகளின்படி, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள கழிவு நீர் மாதிரிகள் மூலம் பைரோலா அடையாளம் காணப்பட்டுள்ளது. சோதனை நான்கு தனித்தனி கண்டங்களில் மாறுபாடு இருப்பதைக் குறிக்கிறது. கூடுதலாக, பிரோலாவின் தோற்றம் எரிஸ் எனப்படும் மற்றொரு மாறுபாட்டின் வருகையுடன் ஒத்துப்போகிறது, இது அறிவியல் ரீதியாக EG.5.1 என அறியப்படுகிறது. இந்த வளர்ச்சிகள், கோவிட்-19 வகைகளின் வளர்ச்சியினால் ஏற்படும் சவால்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

Kokila

Next Post

சாதனை...! Sleep Mode-க்கு சென்ற சந்திரயான்-3 ரோவர்...! இஸ்ரோ புதிய தகவல்...!

Sun Sep 3 , 2023
சந்திரயான்-3 ரோவர் Sleep Mode-க்கு மாற்றப்பட்டுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவில் பிரக்யான் ரோவரின் பணி நிறைவடைந்துள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது. தற்போது நிலவில் பிரக்யான் ரோவர் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு Sleep Mode-க்கு மாற்றப்பட்டுள்ளது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. கடந்த 23-ம் தேதி சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பின்னர் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. தொடர்ந்து அதிலிருந்த பிரக்யான் ரோவர் வெளியேறி, நிலவின் பரப்பில் ஆய்வு மேற்கொண்டு […]

You May Like