fbpx

சூப்பர்…! மகளிர் உரிமைத்தொகை….! வெளியான 2 முக்கிய அப்டேட்கள்…! என்ன தெரியுமா…?

மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. முதற்கட்ட முகாம்கள் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 04-ம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 05-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற்றது. இதுவரை 1.54 கோடிக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. அருகில் மகளிர் உரிமை தொகை குறித்து இரண்டு முக்கிய அப்டேட்கள் வெளியாகியுள்ளன.

போஸ்ட் ஆபிசில் ஆதார் கார்ட், பான் கார்ட் மூலம் எளிதாக e-kyc வங்கி கணக்கு

தமிழக அரசு அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு அவசியம் என்பதால், தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி, ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கு துவங்கி பயன்பெறலாம்.

மேலும், தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி e-KYC (விரல் ரேகை மூலம்) மூலம் ஒரு சில நிமிடங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கு துவங்க முடியும்.

தகுதியான நபர்கள் பட்டியல் :

மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் 2 நாட்களில் முடிவடைந்து விவரங்கள் அனைத்தும் தமிழக அரசிடம் உள்ள தரவுகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தையும் வருகிற செப்டம்பர் 5-ம் தேதிக்குள் செய்து முடித்து தகுதியானவர்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிடும்.‌ செப்டம்பர் 20-ம் தேதி முதல் உதவித்தொகை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

Vignesh

Next Post

குழந்தைகளுக்கு உடற்பயிற்சி சொல்லிக் கொடுப்பதின் நன்மைகள் என்னென்ன…?

Sun Sep 3 , 2023
பொதுவாக, இன்று குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அவரவர் சாப்பிடும் சாப்பாட்டிற்கு ஏற்ற உடல் உழைப்பு இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால், இதனை பெற்றோர் நினைத்தால், தடுக்க முடியும். அதாவது, குழந்தைகளுக்காக எளிமையான முறையில், உடற்பயிற்சியை சொல்லிக் கொடுப்பது மூலமாக, அவர்களின் உடலுக்கு வரும் நோய்களை அறவே தடுக்க முடியும். மேலும், அவர்கள் உடல் பருமனை இதன் மூலமாக தடுக்கலாம் என்பதும், சர்க்கரை நோய் உள்ளிட்ட நீரிழிவு நோய்களையும் முற்றிலுமாக தவிர்க்க […]

You May Like