சென்னை எழும்பூர் காவல் ஆனையர் அலுவலகம் அருகே சரக்கு வாகனம் மோதி ஸ்கூட்டரில் வந்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் புதுப்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதேவி(42) என்பவர் சம்பவ இடத்திலேயெ உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பெண்ணை மோதிய சரக்கு வாகனம் குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் வந்த சென்னை மாநகராட்சி குடிநீர் ஒப்பந்த லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் பள்ளி சென்ற சிறுமி சவுமியா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பீக் அவர்ஸ் நேரங்களில் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் நகரப்பகுதிக்குள் வருவதை தடுக்க தீவிரமாக கண்காணித்து வந்தனர். மீறி வரும் வாகனங்களை கைப்பற்றி அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் சரக்கு வாகனம் மோதி இளம் பெண் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: நடிகை ஆலியா பட்டின் முன்னாள் PA கைது.. ரூ. 76 லட்சத்தை திருடியது அம்பலம்..