தமிழக வெற்றிக் கழகம் என்றஅரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள விஜய், 2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை குறிவைத்து செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் செயற்குழு கூட்டத்தை கூட்டினார். 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக விஜய் நியமிக்கப்படுவதாக தவெக செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு தவெக தலைமையில் கூட்டணி அமைக்க ஏற்றுக்கொண்ட கட்சிகளுடன் மட்டும் கூட்டணி வைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் விதமாக செப்டம்பர் மாதம் முதல் வாரம் முதல் டிசம்பவர் மாதம் வரை விஜய் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆகஸ்ட் மாதத்தில் கட்சியின் 2 வது மாநாடு நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விஜய் அரசியல் கட்சியை தொடங்கியது முதல் யாருடன் கூட்டணி வைப்பார் என்ற கேள்விகள் எழுந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியி இணைவாரா..? அல்லது திராவிட கூட்டணியில் இணைவாரா..? என்ற சந்தேகம் வலுத்த நிலையில் தவெக தலைமையில் கூட்டணி அமையும் என தீர்மானம் நிறைவேற்றி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதனால் 2026 சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவ உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் விஜய் கட்சியில் 1 கோடி உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்படும் நிலையில், மேலும் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க அந்த கட்சி திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 அன்று இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை விஜய் தொடங்கிவைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, ‘My TVK’ என்ற செயலியையும் அவர் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த செயலி மூலம் கட்சி உறுப்பினர்களை நேரடி முறையில் பதிவு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. கட்சி நிர்வாகம், செய்தி வெளியீடுகள், கூட்டங்களின் விவரங்கள், நேரடி அறிவிப்புகள் மற்றும் உறுப்பினர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சிகள் போன்றவை இதில் ஒருங்கிணைக்கப்படடன.
முன்னதாக, 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட முதல்கட்ட தவெக உறுப்பினர் சேர்க்கை செயலி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்த செயலி வெளியான சில மணி நேரங்களிலேயே 2 நாள்களுக்குள் 50 லட்சம் பேர் உறுப்பினராக சேர்ந்தனர். இதில் விஜய் முதல் உறுப்பினராக பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
Read more: “இது லேப்டாப் இல்ல.. வெடிகுண்டு” விமானத்தில் பீதியை கிளப்பிய நபர்.. அவசர அவசரமாக தரையிறக்கம்..!!