ரேஷன் கார்டு இருக்கா..? ரூ.25 லட்சம் கடனுதவி வழங்கும் தமிழக அரசு..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

ration cad

தமிழ்நாடு அரசு தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் கடன் தொகுப்பு திட்டங்களை வைத்துள்ளது. அந்தவகையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் இப்போது Tabcedco மூலம் லோன் பெற விண்ணப்பிக்கலாம். tamil nadu backward classes economic development corporation limited என்பதன் சுருக்கமே Tabcedco ஆகும். 


இது பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் வகுப்பினரின் முன்னேற்றத்திற்காக செயல்படும் தமிழக அரசின் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் கீழ் 25 லட்சம் தனி நபர் தொழில் கடன் பெற ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் அவசியமாகும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

* விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும்.

* குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும். 3) விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

* ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

* தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் சிறுவர்த்தகம் / வணிகம், விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் மரபு வழி சார்ந்த தொழில்கள் செய்வதற்கு அதிக பட்சமாக ரூ.25.00 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் ரூ.1.25 இலட்சம் வரை 7% மற்றும் ரூ.1.25 இலட்சம் முதல் ரூ.15.00 இலட்சம் வரை 8% கடனைத் திரும்ப செலுத்தும் காலம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை.

* குழுக் கடன் திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சிறுதொழில் / வணிகம் செய்வதற்கு ஒருவருக்கு அதிக பட்சமாக ரூ.1.25 இலட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.25.00 இலட்சம் வரையும் ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது. கடனைத் திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள். சுய உதவிக் குழு துவங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் தரம் (Grading) செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இருபாலருக்கான சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கும் இக்கடனுதவி வழங்கப்படுகிறது.

* பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.60,000/- வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 7% திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள்

இதற்கு விண்ணப்பிக்க ஜாதி சான்றிதழ் மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் அவசியமாகும். மேலும் இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை அறிவதற்கு http://www.tabcedco.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Read more: ஷாக்!. நிர்வாணப்படுத்தி மாணவிகளிடம் மாதவிடாய் சோதனை!. பள்ளி முதல்வர் உட்பட 8 பேர் மீது பாய்ந்த நடவடிக்கை!.

Next Post

விசிகவுக்கு புதிய பொதுச்செயலாளர்..? தலித் அல்லாத ஒருவருக்கு பதவி வழங்க திருமா முடிவு..!!

Thu Jul 10 , 2025
விசிகவுக்கு தலித் அல்லாத சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு பொதுச்செயலாளர் பதவியை வழங்க திருமாவளவன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் ஜூலை 4 ஆம் தேதி விசிகவின் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே விசிக தலைவர் திருமாவளவன், “இன்றைய கூட்டத்தில் கூட்டணி பற்றியோ திமுகவிடம் எத்தனை சீட் கேட்க வேண்டும் என்பது பற்றியோ பேச வேண்டாம். தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன.. அதனால் இவற்றை […]
thirumavalavan 1

You May Like