அமெரிக்க அதிபர் டிரம்ப் சூரிய குளியலில் ஈடுபட்டிருக்கும்போது டிரோன் தாக்குதல் மூலம் கொல்லப்படலாம் என்று ஈரான் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் மீண்டும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் – ஈரான் இடையில் தலையிட்ட அமெரிக்கா, ஈரானின் அணுசக்தி நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இது போர் பதற்றத்தை அதிகரித்தது. இந்த நிலையில், ஈரான் நாட்டு ஆட்சியாளரான அயதொல்லா அலி கமேனியின் மூத்த ஆலோசகர் ஜாவத் லரிஜானி அளித்த பேட்டி ஒன்று மீண்டும் போர் அச்சத்தை தூண்டியுள்ளது. புளோரிடாவின் உள்ள அவரது வீட்டில் டிரம்ப் நீண்ட நேரம் சூரிய குளியல் போட முடியாது. ஏனெனில், அவர் மீது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்படலாம். இது மிகவும் எளிமையான விஷயம்,’ என்று கூறினார்.
கடந்த 2020ம் ஆண்டு ஈரான் தளபதி சுலைமாணியை டிரம்ப் உத்தரவின் பேரில் கொன்றதற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த டிரம்ப், உண்மையில் அது ஒரு அச்சுறுத்தலாக இருக்கலாம், தான் கடைசியாக 7 வயதில் சூரிய குளியல் போட்டதாகவும், தனக்கு அதன் மீது ஆர்வமில்லை என்றும் பதிலளித்துள்ளார்.
Readmore: ஆக்ஸியம்-4 மிஷன்!. சுபன்ஷு சுக்லா குழுவினர் ஜூலை 14க்குள் திரும்புவது சாத்தியமில்லை!. ESA தகவல்!