டிராக்டர் டிராலிக்குள் ஆம்புலன்ஸின் முன்பகுதி சிக்கிக்கொண்ட நிலையில், உள்ளே இருந்தவர்களை மீட்கும் பணியில் பரபரப்பு ஏற்பட்டது. சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி அருகே இன்று காலை நடந்த இந்த விபத்தில் பெண் செவிலியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். சம்பல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த ஆம்புலன்ஸ், முன்னால் சென்றுகொண்டிருந்த டிராக்டர் டிராலியின் மீது திடீரென மோதியது. மோதல் மிகவும் வலுவாக இருந்ததால் ஆம்புலன்ஸின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி […]

வீட்டின் முன்பு குடும்பத்தினருடன் அமர்ந்திருந்தவர்களுக்கு அடுத்த சில நிமிடங்களில் நடந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கையில் கோடாரியுடன் வந்த நபர், அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்களை விரட்டியதுடன், ஒரு நாயை பிடித்து தாக்கிக் கொன்றுள்ளார். இதைத் தடுக்க முயன்றவர்களும் அவரது ஆவேசத்துக்கு ஆளாகியுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. திங்கட்கிழமை மாலை 5.15 மணியளவில் நரேந்திர அகிர்வார் தனது […]

கனடாவில் விமானப் பயிற்சியின் போது ஏற்பட்ட கோர விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மனோஜ் சிவகுமார் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீசரண் திருஞானசம்பந்தம் ஆகிய இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள வான்கூவரில் உள்ள இந்தியத் தூதரகம் (Consulate General of India, Vancouver), உயிரிழந்த மாணவர்களின் உடல்களை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் தூதரகம் செய்யும் எனத் தெரிவித்துள்ளது. விபத்து நடந்தது எப்படி? விபத்து […]

மும்பை கடற்கரை சாலையில் அதிவேகமாக சென்ற சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு சுமார் 75 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த பயங்கர விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பை கடற்கரை சாலையின் வடக்கு நோக்கிய வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த விபத்து நடந்தது. ஹாஜி அலி அருகே உள்ள லோட்டஸ் ஜெட்டி பகுதியில் அதிகாலை […]

டெல்லியின் புறநகர் பகுதியான ஸ்வரூப் நகரில், 16 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் சடலத்தை வயல்வெளியில் வீசிவிட்டு இலைகள் மற்றும் சேற்றால் மூடி மறைக்க முயன்ற 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த 13-ம் தேதி குஷாக் சாலை அருகே உள்ள ஒரு திறந்தவெளிப் பகுதியில் நாய்கள் ஏதோ ஒன்றை கடித்துக் குதறுவதை அப்பகுதி […]

அமராவதி மாவட்ட மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த பிரிவில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 6 குழந்தைகள் தீவிர சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்ட மருத்துவமனையின் மகளிர் மருத்துவமனையில் இன்று ஆகஸ்ட் 24-ம் தேதி அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இந்த சம்பவம் […]

வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தின் மய்மன்சிங் (Mymensingh) பகுதியில் ஒரு இந்துத் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டுப் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்தார். சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ […]

பஞ்சாப் மாகாணத்தின் பைசலாபாத் மாவட்டம் மாலிக்பூரில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இன்று காலை பாய்லர் வெடித்ததில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாலையில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததால், தொழிற்சாலை கட்டிடங்களில் ஒன்று உட்பட அருகிலுள்ள கட்டமைப்புகள் இடிந்து விழுந்தன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் இருப்பதாகவும் பைசலாபாத் துணை ஆணையர் ராஜா […]

நேபாளத்தின் சுஷிலா கார்கி அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜெனரல்-இசட் போராட்டத்தின் போது கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது தவிர, பிற தேவையான செலவுகளுக்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வழங்கப்படும். மேலும் இந்த போராட்டத்தில் கொல்லப்பட்ட அனைவரையும் தியாகிகளாக அரசு அறிவித்துள்ளது. இதனுடன், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ம் தேதி துக்க நாளாக அனுசரிக்கவும் முடிவு […]

அமெரிக்காவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி உட்பட 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மத்திய மன்ஹாட்டன் பகுதியில் மக்கள் நெரிசல் மிகுந்த இடத்திற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில், NYPD அதிகாரி உட்பட 4 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது, துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் 27 வயதான ஷேன் […]