பாஜகவின் டப்பிங் வாய்ஸில் பேசிய பழனிசாமி, தற்போது பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸில் பேசுகிறார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் ரூ.846 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின் பல நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அப்போது கலைஞர் கருணாநிதியின் ஆட்சியின் நீட்சி தான் இந்த திராவிட மாடல் ஆட்சி என்று முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். திருவாரூர் என்றாலே, தேரும், கலைஞரும் தான் நினைவுக்கு வரும்.. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி தலைநிமிர்ந்து நிற்கிறது.. தமிழ்நாட்டை நோக்கி ஏராளமான தொழிற்சாலைகள் வருகிறது.. ஏராளமான வேலைவாய்ப்பு பெருகி உள்ளது.
கடந்த நான்கரை ஆண்டுகளில் திருவாரூருக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நாள் முழுக்க சொல்லிக்கொண்டே போகும் அளவுக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.. கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஒன்றிய அரசால் கூட மறுக்க , மறைக்க முடியவில்லை..
இதை எல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தற்போது தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்கிறார்.. அதிமுகவை மீட்க முடியாத இவர் தமிழகத்தை மீட்கப் போகிறாராம்.. தமிழ்நாட்டின் எல்லா உரிமைகளையும் பறித்தவர்கள் கூட கூட்டணி வைத்து எப்படி உங்களால் கூச்சமே இல்லாமல் பயணம் செய்ய முடிகிறது..
இந்து சமய அறநிலையத்துறையில் கல்லூரி கட்டக்கூடாது என்று பழனிசாமி பேசுகிறார். இதற்கு முன்பு பாஜகவின் டப்பிங் வாய்ஸில் பேசிய பழனிசாமி, தற்போது பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸில் பேசுகிறார். அறநிலையத்துறை சட்டத்தில் கல்லூரி தொடங்க சட்டம் உள்ளது.. இது கூட தெரியாமல் நீங்கள் எப்படி தான் முதலமைச்சராக இருந்தீர்களோ எனக்கு தெரியவில்லை.. பாஜக தலைவர்களே இந்த மாதிரி கல்லூரி திறக்கக் கூடாதென்று பேசுவதில்லை.. ஆனால் பழனிசாமி மட்டும் பேசுறாரு.. வடிவேல் படத்தில் வரும் காமெடி தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.. ‘கொடுத்த காசுக்கு மேல என்னமா கூவுறான்’ அந்த மாதிரி பாஜகவினரே பேசிக்கொண்டிருக்கிறார்கள்..
நான் பழனிசாமியை நேரடியாக கேட்கிறேன்.. படிப்பு என்றால் ஏன் உங்களுக்கு அவ்வளவு கசக்குது. கல்விக்காக உண்மையிலேயே குரல் எழுப்புவதாக இருந்தால், கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்க ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை.. இதற்காக குரலெழுப்ப எதிர்க்கட்சி தலைவருக்கு நெஞ்சுரம் இருக்கா?
பழனிசாமி அவர்களே.. மக்களுக்கு எதிராக பேசிவிட்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நப்பாசை உடன் நீங்கள் என்ன பயணம் செய்தாலும் மக்கள் ஒருபோதும் உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.. ஏனெனில், துரோகங்கள் உங்கள் வரலாறு.. மக்களாகிய நீங்கள் எங்களுடன் ஓரணியில் ஒற்றுமையாக நிற்க வேண்டும்.. நம் மண், மொழி, மானம் காக்க திமுகவும், கலைஞரின் கொள்கை வாரிசான ஸ்டாலினும் என்றென்றும் துணை நிற்போம்” என்று தெரிவித்தார்..
Read More : அது என்ன திமுக பணமா? இனியும் இது தொடர்ந்தால் மாபெரும் போராட்டம் நடக்கும்.. விஜய் எச்சரிக்கை..