கோயம்புத்தூர் மாவட்டத்தில் வேலை.. ரூ.23,000 சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? – விவரம் இதோ..

job

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 104 பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளன.


பணியிட விவரம்:

  • வேக்சின் கோல்டு செயின் மேனேஜர் – 1
  • ஜெனிடிக் கவுன்சிலர் -1
  • பாதுகாப்பு காவலர் – 6
  • ULB-UHN நகர்புற செவிலியர்- 96

வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயதிற்கும் குறைவாக இருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

* வேக்சின் கோல்டு செயின் மேனேஜர் பதவிக்கு கணினி அறிவியல் அல்லது தகவல் தொடர்பியல் ஆகிய பாடங்களில் B.E, B.Tech பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் டேட்டா பேஸ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் அட்மினாக 1 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

* ஜெனிடிக் கவுன்சிலர் பதவிக்கு சமூகவியல்/ உளவியல்/ சமூக சேவை/ GNM டிப்ளமோ அல்லது நர்சிங் ஆகியவற்றில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதார்கள் கட்டாயம் பழங்குடியினவராக இருக்க வேண்டும்.

* பாதுகாப்பு காவலர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* ULB-UHN நகர்புற செவிலியர் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ANM படிப்பை 1 அல்லது 2 வருடம் முடித்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்: வேக்சின் கோல்டு செயின் மேனேஜர் பதவிக்கு மாதம் ரூ.23,000 சம்பளமாக வழங்கப்படும். ஜெனிடிக் கவுன்சிலர் பதவிக்கு மாதம் ரூ.18,000 சம்பளம் வழங்கப்படும். பாதுகாப்பு காவலர் பதவிக்கு மாதம் ரூ.8,500 சம்பளம் வழங்கப்படும்.
ULB-UHN நகர்புற செவிலியர் பதவிக்கு மாதம் ரூ.14,000 சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://coimbatore.nic.in/ என்ற கோயம்புத்தூர் மாவட்ட இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, நேரிலோ அல்லது விரைவு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் ஏற்கனவே தொடங்கிய நிலையில், ஜூலை 18-ம் தேதி வரை விண்ணப்பதார்கள் விண்ணப்பிக்கலாம். அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்: பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை தேவையான விவரங்களுடன் பூர்த்தி செய்ய வேண்டும். அதனுடன் பாஸ்போஸ்ட் சைஸ் போட்டோ மற்றும் விண்ணப்பதாரரின் முகவரி, அழைபேசி எண் குறிப்பிடப்பட வேண்டும். அதோடு, அனைத்து மதிப்பெண்கள் சான்றிதழ்களின் நகல்கள், வகுப்பு பிரிவு சான்றிதழ் நகல் (சாதி சான்றிதழ்), இருப்பிட சான்றித நகல் (குடும்ப அட்டை/ ஆதார அட்டை) அனைத்தையும் இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

உறுப்பினர் செயலளர்/ மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
219, ரேஸ் கோர்ஸ் ரோடு,
கோயம்புத்துர் – 18.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.07.2025

Read more: பள்ளிகளில் இனி லாஸ்ட் பெஞ்ச் கிடையாது.. எல்லாருமே ஃபர்ஸ்ட் பெஞ்ச் தான்..!! – கல்வித்துறையில் மாற்றத்தை கொண்டு வந்த திரைப்படம்

Next Post

8வது ஊதியக் குழு : ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய குட்நியூஸ்.. இந்த தொகை உயரப்போகிறது..

Thu Jul 10 , 2025
8வது ஊதியக் குழுவில் ஓய்வூதியதாரர்களின் நிலையான மருத்துவ கொடுப்பனவை ரூ. 1,000 இலிருந்து ரூ. 3,000 ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் 8வது ஊதியக் குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வு குறித்து பல ஊகங்கள் எழுந்துள்ளன. இருப்பினும், இப்போது கவனம் சம்பளத்தில் மட்டுமல்ல, […]
8th Pay Commission Pension Increase 780x470.jpg 1

You May Like