நம் வாழ்க்கையில் நேரும் இன்பம், துன்பம் அனைத்தும் முந்தைய பிறவிகளில் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்பவே நடக்கின்றன என்று நம் மரபு கூறுகிறது. ஆனால், கடவுள் நினைத்தால் அந்த தலைவிதியே மாற்றியெழுத முடியும் என்றும் நம்பப்படுகின்றது. அப்படிப் புனிதமான மாற்றத்துக்கான வாய்ப்பு தரும் அதிசய தலமாகவே கருதப்படுகிறது மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக் திரியம்பகேஷ்வரர் கோவில்.
இந்தத் திருத்தலமானது சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகும். ஆனால், இதில் தனித்தன்மை என்னவெனில் இங்கு சிவபெருமான் மூன்று முகங்களுடன் காட்சி தருகிறார்: பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மும்மூர்த்திகளின் சக்தியும் சிந்தனையும் ஒன்றாக உள்ளடக்கிய ஒரே லிங்க வடிவத்தில் சிவன் காட்சி தருகிறார்.
இதனாலே, இங்கு வழிபடுபவர்கள் பாவ நிவாரணம் மட்டும் அல்ல, தலைவிதி மாற்றமும் பெறுவார்கள் என்ற நம்பிக்கை வலிமையாக நிலவி வருகிறது. இந்த கோவிலுக்குள் குஷவர்த்த குண்ட் என்ற தீர்த்தக் குளம் உள்ளது. இது, கோதாவரி ஆற்றின் பிறப்பிடம் என்றும் கூறப்படுகிறது. இதனை “தென்னகத்து கங்கை” என்றும் பக்தர்கள் போற்றுகின்றனர். இந்த தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தாலே, பாவங்கள் நீங்கும், மோட்சம் கிட்டும் என்று பக்தர்களின் உறுதியான நம்பிக்கை.
இக்கோவிலில் உள்ள மூலவர் லிங்கம் எப்போதும் தண்ணீருக்கு அடியிலேயே உள்ளது. அந்த அளவிற்கு கருவறையில் தண்ணீர் ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கும். இந்த நீரூற்ற பெருகி வருவது மும்பெரும் தேவர்களின் பேராற்றலை குறிப்பதாக நம்பப்படுகிறது. இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால் முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த கோவில் குளமான கோதாவரி ஆற்றில் மூழ்கி எழுந்தால் பாவங்கள் நீங்கி, மோட்சத்தை அடைய முடியும் என சொல்லப்படுகிறது.
Read more: ட்ரம்பை கொல்ல சதித்திட்டம்.. ஈரான் அதிகாரி பகீர் தகவல்.. ‘அவர் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்படலாம்’