மகளிர் உரிமை தொகை.. புதிய பயனாளர்களுக்கு இந்த முறை பணம் கிடைக்காது..? ஷாக் நியூஸ்

magalir thoga3 1694054771 down 1750124150 1

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.


இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி ரூ.1000 பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கம் ஜூலை 15ஆம் தேதி தொடங்குகிறது.

கடந்த முறை மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் இந்த முறை விண்ணப்பிக்கலாம். ஆவணங்கள் சரியில்லாமல் நிராகரிக்கப்பட்டவர்கள், கடந்த சில மாதங்களில் திருமணமான பெண்களும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டது. மேலும் குடும்ப தலைவி மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டியது இல்லை என்றும், ஒரு குடும்பத்தில் தாய் இறந்துவிட்ட நிலையில், அந்த குடும்பத்தில் இருக்கும் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டது.

இதற்காக நகரப்பகுதிகளில் 3768 முகாம்கள், கிராமங்களில் 6232 முகாம்கள் என மொத்தம் 10000 முகாம்கள் நடத்தப்படும். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விடுபட்ட தகுதியுள்ள பெண்கள், இந்த முகாம்களில் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் முடிவெடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

ஆனால் இந்த திட்ட விரிவாக்கத்திற்கு அரசு 7 கோடி மட்டுமே கூடுதலாக ஒதுக்கியுள்ளதாகவும் புதிதாக 5883 பேருக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியும் என்றும் அன்புமணி குண்டை தூக்கி போட்டுள்ளார். புதிய பயனாளர்களுக்கு பணம் கிடைக்க தாமதமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ள நிலையில் இந்த செய்தி தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more: தெரு நாய்களுக்கு இனி தினமும் சிக்கன் ரைஸ்.. மாநகராட்சி நிர்வாகம் முடிவு..!! – பின்னணி இதோ

Next Post

Jobs: SSC காலி பணியிடங்கள்... விண்ணப்பிக்க 24-ம் தேதி வரை கால அவகாசம்...!

Fri Jul 11 , 2025
மத்திய பணியாளர் தேர்வாணையம் பன்முகத் திறன் (தொழில்நுட்பம் அல்லாத) பணி மற்றும் ஹவில்தார் பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பன்முகத் திறன் (தொழில்நுட்பம் அல்லாத) பணியாளர் மற்றும் ஹவில்தார் பணிக்கான தேர்வு 2025 குறித்து மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு நிறுவனங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்களில் பன்முகத்திறன் பணியாளராக […]
ssc job

You May Like