சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளியான அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் காவல்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும், கடந்த 4 ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர் நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விஜய் தலைமையில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சென்னை சிவானந்தா சாலையில் காவல் மரணங்களை கண்டித்து சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கருப்பு உடை அணிந்து தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டார். சாதி வேண்டாம் – நீதி வேண்டும் என்ற பதாகையை கையில் ஏந்திய விஜய் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினார். அவர் பேசுகையில் உங்கள் ஆட்சியில் 24 காவல் மரணங்கள் நடந்துள்ளது. 24 பேரின் குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்டீங்களா.. தயவு செய்து மன்னிப்பு கேளுங்கள்..
அண்ணா பல்கலைகழகம் பாலியல் விவகாரம் முதல் அஜித்குமார் மரணம் வரை நீதிமன்றம் தலையிட்டு தமிழக அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புகிறது. அனைத்தையும் நீதிமன்றம் தான் கேட்க வேண்டும் என்றால் முதலமைச்சர் பதவி எதற்கு? இந்த அரசு எதற்கு..? எத்தனை கேள்வி கேட்டாலும் உங்களிடம் இருந்து பதில் வரப்போவது கிடையாது. திமுக ஆட்சி சாரி மா மாடல் ஆட்சியாக மாறிவிட்டது. கட்சி தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகும் நிலையில், முதல் முறையாக விஜய் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
Read more: செந்தில் பாலாஜிக்கு போட்டியாக கரூரில் ஆட்சேர்ப்பு வேட்டையை தொடங்கிய EX அமைச்சர்..!!