உஷார்…! வெளிநாட்டில் வேலைக்கு செல்லும் நபர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்…!

Tn Govt 2025

வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.


இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடி செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இந்த அறிவுரை வெளியிடப்படுகிறது. வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்பும் நபர்கள், முதலில் இந்திய அரசின் https://emigrate.gov.in இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலமாகவே செல்ல வேண்டும். எந்த நிறுவனத்தில் அல்லது முதலாளியிடம் வேலை செய்ய இருக்கிறீர்கள் போன்ற தகவல்களையும் முன்னதாக உறுதி செய்துகொள்வது அவசியமாகும்.

வேலைக்கான ஒப்பந்தம், விசா மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களும் பெற்ற பிறகே பயணிக்க வேண்டும். வேலைக்கான ஒப்பந்தத்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அதில் ஊதியம், வேலை விவரங்கள், உரிமைகள், பொறுப்புகள் போன்ற முக்கியமான விவரங்கள் இடம்பெறுகின்றன. வேலை செய்யும் நாட்டின் சட்டங்கள், கலாச்சாரங்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும். பல நாடுகளில் வேலைக்கு செல்லும் நபர் நாடு திரும்புவதற்கு வெளிச்செல் அனுமதி (Exit Permit) பெறுவது அவசியமாகும்.

ஒப்பந்த காலத்தில் வேலைக்கு சென்ற நிறுவனம் / முதலாளியிடமிருந்து வேறு நிறுவனத்திற்கோ, முதலாளிக்கோ மாற்றம் செய்ய முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே நேரத்தில், பதிவு பெறாத போலி முகவர்கள் மூலம் வேலைக்கு செல்லும் நோக்கத்தில் வெளிநாடு பயணிக்கக் கூடாது. சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது. அந்நாட்டில் சட்டவிரோதமாகக் கருதப்படும். இது கைது, அபராதம். அல்லது சிறை தண்டனைக்கே இட்டுசெல்லும்.

வெளிநாட்டு வேலை தொடர்பான சந்தேகங்களுக்கு மற்றும் வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து அறிய தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் 24/7 கட்டணமில்லா உதவி மையத்தினை இந்தியாவிலிருந்து அழைப்புக்கு: 1800 309 3793 | வெளிநாடுகளிலிருந்து : 080 6900 9900 என்ற எண்ணில் அழைக்க வேண்டும். 080 6900 9901 எனக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். மின்னஞ்சல் : மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது netchannainte.gov.inவலைத்தளம்: https://nrtamils.In.gov.in வாயிலாக தொடர்பு கொள்ளவும்.

Read more: இன்று உலக மக்கள் தொகை தினம்!. 2030க்குள் இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும்!. இந்த மாநிலம்தான் முதலிடம்!.

Vignesh

Next Post

போலி நன்கொடை விலக்குகள்!. தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் வருமான வரித்துறை திடீர் ரெய்டு!

Tue Jul 15 , 2025
போலியாக அரசியல் நன்கொடை, மருத்துவம் மற்றும் கல்விக் கட்டண விலக்குகள் தொடர்பாக தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனைகளை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குறிப்பாக அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு அறக்கட்டளைகளுக்கு நன்கொடைகள் வழங்கப்பட்ட நிறுவனங்களின் 150 வளாகங்களில் ஒருங்கிணைந்த முறையில் சோதனை நடத்தியது. 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரிச் சலுகைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து விரிவான பகுப்பாய்விற்குப் பிறகு, […]
income tax raid 11zon

You May Like