fbpx

நோட்…! இவர்களுக்கு மட்டும் 11,12 ஆகிய தேதிகளில் பொறியியல் துணை கலந்தாய்வு நடைபெறும்…!

எஸ்.சி. பிரிவினரை நிரப்புவதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் B.E, B.Tech, படிப்புகளில் சேர்வதற்கான பொறியியல் துணை கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் கலந்தாய்வு செப்டம்பர் 11-ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. பொதுப் பிரிவில் விண்ணப்பித்த மாணவர்கள் இன்று மாலை 5 மணி வரை விருப்பக் கல்லூரிகளை பதிவு செய்யலாம்.

பொதுப்பிரிவில் விண்ணப்பித்துள்ள 13,650 பேரில் 13,244 மாணவர்கள் துணை கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள 4,585 மாணவர்களில் 4,446 பேர் துணை கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 10 மணிக்கு வழங்கப்படும் தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையை மாலை 5 மணிக்குள் மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். 8-ம் தேதி வரை இணைய வழியில் துணை கலந்தாய்வு நடத்தப்படும். காலியாக உள்ள இடங்களில் எஸ்.சி. பிரிவினரை நிரப்புவதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

SBI PO 2023 ஆட்சேர்ப்பு!… 2000 காலியிடங்கள்!… இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!

Thu Sep 7 , 2023
பாரத ஸ்டேட் வங்கியின் (SBI PO 2023) வெவ்வேறு கிளைகளில் உள்ள Probationary Officers (PO) 2000 காலியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இன்றுமுதல் இப்பணிக்கு விண்ணப்பிக்க தொடங்கலாம். நாட்டில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிகளில் 2000 ப்ரோபேஷனரி அதிகாரிகளுக்கான (PO) 2,000 காலியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றுமுதல் 27 ம் தேதி வரை இப்பணிக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். முதற்கட்ட […]

You May Like