பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கிபயணம் செய்து விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க முதற்கட்டமாக 200 பேருந்து படிக்கட்டுகளில் தானியங்கிக் கதவுகள் பொருத்துவதற்கு ரூ.67 லட்சம் மதிப்பீட்டில்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீதமுள்ள பேருந்துகளுக்கும் படிப்படியாக தானியங்கி கதவுகள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் தெரிவித்துள்ளார். சென்னை மாநகர பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணிப்பதால், அடிக்கடி […]

இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா ஜனவரி 26-ம் தேதி தொடங்கியது. இந்த விழாவுக்கான பந்தகால் நடும் நிகழ்வு கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி நடைபெற்றது. ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு, ஆஸ்ரம வளாகத்தில் பந்தல் காலுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபா […]

சேலம் மாவட்டத்தில் தாட்கோ மூலம் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பட்டயப் படிப்பு மற்றும் பொறியியல் பட்டப்படிப்பில் மெக்கானிக்கல் புரொடக்சன் டெக்னாலஜி. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின […]

மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் சட்டம் 2016′-ன் கீழ், மாற்றுத்திறனாளிகளின் பிரிவுகள் 3-ல் இருந்து 5-ஆக உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு மத்திய அரசுப் பணிகளில் 3 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகவும், கல்வியில் 5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்திற்காகவும், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கவும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றார் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங். குடிமைப் பணிகள் தேர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டணச் சலுகை, குடிமைப் பணிகள் தேர்வில் […]

பாகிஸ்தானில் ராணுவ தளம் மீது தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 23 வீரர்கள் பலியாகினர். தாலிபன் தீவிரவாதிகள் கடந்த 2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பாகிஸ்தான் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு முழுவதும் தாலிபன் தீவிரவாதிகள் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரை குறி வைத்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். தெஹ்ரிக்-இ-தாலிபன் தீவிரவாத அமைப்பில் இருந்து பிரிந்து உருவான தெஹ்ரிக்-இ-ஜிகாத் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு […]

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தேர்வர் ஒருவருக்கு தலா ரூ.25,000/- வீதம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, மாதிரி ஆளுமைத் தேர்வுகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இனவாரியாகவும் கிராமப்புறங்களில் உள்ள ஏழை […]

வெள்ளத்தால் கல்வி சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு மீண்டும் இலவசமாக சான்றிதழ்கள் வழங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 7-ம் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்திருந்தது. மேலும், புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் மாணவர்கள் நலன் கருதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் […]

சென்னை, திருவள்ளூர், உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் நாளை முதல் திறக்கப்படவுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் நாளை முதல் திறக்கப்படவுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதே போல கல்லூரிகள் நாளை முதல் வழக்கம் போல் திறக்கப்படும். எனவே, பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் முறிந்து விழுந்த மரங்களும், மரக்கிளைகளும் […]

கனமழை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. காரணமாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனமழை காரணமாக […]

சென்னையில் கிண்டி, தியாகராய நகர், எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் இடைவிடாத லேசான மழை பெய்து வருகிறது. இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதி கனமழை பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும். மேலும் லேசான மழையோ, தூரலோ இருந்தால் விடுமுறை அறிவிக்க கூடாது. தொடர்ந்து, விடுமுறை குறித்த முடிவை பள்ளி […]