தற்போது, மனிதர்கள் அன்றாட வாழ்வில் காலை எழுந்தவுடன், பெட் காஃபி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த பெட் காஃபி சாப்பிடாமல் படுக்கை அறையை விட்டு எழுந்தால், அன்றைய நாள் தொடங்கியது போலவே தெரியாது என்ற அளவிற்கு தற்போது வந்து விட்டது. ஆனால், காலையில் காபி சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல என்றும் சொல்லப்படுகிறது.
இப்படி காலையில், காபி சாப்பிடுவதால், செரிமான பிரச்சனைகள் இரத்த சர்க்கரை ஏற்றத்தாழ்வு உண்டாகும். மனநிலை மாற்றங்கள் ஏற்படுவதோடு, பதற்றத்தையும் உண்டாக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த காபிக்கு அதன் சொந்த பலன்களும் இருக்கின்றன. அதோடு இது குறித்து நடத்தப்பட்ட பல ஆய்வுகள் காபியின் ஆரோக்கியத்தில், மிக நீண்ட ஆயுள், இதய நோய், நீரிழிவு நோய், அல்சைமர் நோய் மற்றும் புற்று நோயை தடுப்பதற்கான விளைவுகளும் இதில் இருக்கிறது என்று சொல்கிறது. ஆனாலும், காலையிலேயே காபி குடிப்பது மிக மோசமான விளைவை தரலாம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால், அந்த சமயத்தில், அந்த சமயத்தில் நம்முடைய கார்டி சோலின் அளவு ஏற்கனவே அதிகமாக இருக்கிறது. அத்துடன் காபி சாப்பிடுவதால், மன அழுத்த ஹார்மோனின் அளவை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இது மனநிலை மாற்றங்கள் மற்றும் பதற்றத்தை அதிகரிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனாலும், இன்றைய வாழ்வியல் அமைப்பில் பலருக்கும் காபி என்பது காலையில் இன்றியமையாத தேவையாகி விட்டது. ஆனாலும், வெறும் வயிற்றில் காபி சாப்பிடுவதால், அவர்களுக்கு ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் தொடர்பாக யாரும் இதுவரையில் அறிந்திருக்கவில்லை.
ஆகவே, காபி சாப்பிடுவதற்கு சரியான நேரம் எது? காலை எழுந்தவுடன் காபி சாப்பிட்டால், என்ன நடக்கும்? அதுவும் வெறும் வயிற்றில் காபி சாப்பிட்டால், வயிற்றுக்குள் நடைபெறும் மாற்றங்கள் என்னென்ன? என்பதை ஊட்டச்சத்து நிபுணர்கள் விளக்கி கூறி இருக்கிறார்கள்.
அதாவது, வீக்கம், குமட்டல், அஜீரணம் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இந்த காபி வயிற்றில் அமில உற்பத்தியை தூண்டுகிறது என்றும் சொல்லப்படுகிறது. உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் வயிற்று அமிலத்தின் உற்பத்தியை இது அதிகரிக்கிறது. ஆகவே, உடலின் செரிமான அமைப்பை வெகுவாக பாதிக்கிறது. அத்துடன் மட்டுமல்லாமல், அஜீரணம், வீக்கம், குமட்டல் உள்ளிட்ட பிரச்சனைகளையும் உடலில் உண்டாக்குகிறது.
மேலும், இது கார்டிசோலை அதிகரிக்க செய்கிறது. அத்துடன், அண்ட விடுப்பின் எடை மற்றும் ஹார்மோன் சமநிலையை எதிர்மறையாக மாற்றும் தன்மை கொண்டது. அதோடு நீங்கள் விழித்திருக்கும் சமயத்தில் இயற்கையாகவே உஷாராக உணர வைக்கின்றது. ஆகவே, காலையில் எழுந்தவுடன் காபி சாப்பிடாமல், காலை உணவுக்குப் பிறகு காபி அருந்துவது நல்லது என்று கூறப்படுகிறது.
.