Tn Govt: மூலிகை அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்க தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி…!

Tn Govt 2025

மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் தொடர்பான தமிழக அரசு வழங்கும் பயிற்சி வகுப்பு.


இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சென்னையில், மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி வரும் 23.07.2025 முதல் 25.07.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் தேங்காய் எண்ணெய் சோப்பு, மூலிகை சோப்பு (Bio ENZYME). ஆயுர்வேத சோப்பு, முடி வளரும் எண்ணெய், முடி வளரும் ஷாம்பு, ஃபேஸ் வாஷ் ஜெல், கை கழுவும் திரவம் மற்றும் பயிற்சி வழிமுறைகளுடன் சுயமாக தொழில் தொடங்குவதற்கு இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இப்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம். சென்னையில் பங்குபெறும் ஆண், பெண் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600032. 8668102600, 8072914694.

Read more: 350 ராணிகள், 88 குழந்தைகளுடன் வாழ்ந்த மன்னர்!. கிரிக்கெட் வீரர்; விமானம் வாங்கிய முதல் இந்தியர்!. பல ரெக்கார்டுகளுக்கு சொந்தக்காரர்!.

Vignesh

Next Post

கொரோனா அலை ரிட்டன்!. 25 அமெரிக்க மாநிலங்களில் தொற்று அதிகரிப்பு!. நிபுணர்கள் எச்சரிக்கை!

Thu Jul 17 , 2025
அமெரிக்கா முழுவதும் கோவிட்-19 வழக்குகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) படி, ஜூலை 8 நிலவரப்படி, NB.1.8.1 (நிம்பஸ்) மற்றும் XFG (ஸ்ட்ராடஸ்) போன்ற புதிய மாறுபாடுகளால் புளோரிடா மற்றும் டெக்சாஸ் உட்பட மொத்தம் 25 அமெரிக்க மாநிலங்களில் தொற்றுகள் அதிகரிப்பதைக் காண்கிறோம், இது “கோடை அலை” திரும்புவதைக் குறிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் கோடை அலை ஏற்படும் என்று […]
covid 19 america 11zon

You May Like