திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கடந்த சில நாள்களாக உடல் பாதிக்கப்பட்டிருந்த வேலு பிரபாகரன், சென்னையில் உள்ள தனியா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், வேலு பிரபாகரன் இன்று (ஜூலை 17) பிற்பகல் 12.20 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டர். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1980ஆம் ஆண்டு வெளியான ‘இவர்கள் வித்தியாசமானவர்கள்’ திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக திரை உலகிற்கு அறிமுகமானார் இயக்குனர் வேலு பிரபாகரன். தொடர்ந்து, 1989ல் ‘நாளைய மனிதன்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக கால் பதித்தார். அதன் தொடர்ச்சியாக 1990ல் ‘அதிசய மனிதன்’ என்ற படத்தை இயக்கினார். இவை 2 வென்றும் ஹிட் ஆனது.
தொடர்ந்து, ஆர்.கே. செல்வமணி தயாரித்த ‘அசுரன்’, ‘ராஜாகிளி’ ஆகிய படங்களை இயக்கினார். ஆனால், இந்த இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தன. பின்னர் அருண் பாண்டியன் நடித்த ‘கடவுள்’, நெப்போலியன் நடித்த ‘சிவன்’, மற்றும் சத்யராஜ் நடித்த ‘புரட்சிக்காரன்’ ஆகிய படங்களை இயக்கினார். ஆனால் அவை எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை.
அதன் பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய வேலு பிரபாகரன், ‘பதினாறு’, ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’, ‘கடாவர்’, ‘பீட்சா 3’, ‘ரெய்டு’, ‘வெப்பன்’, ‘கஜானா’ உள்ளிட்ட பல படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். 2009ல் மீண்டும் இயக்கத்திற்கு திரும்பிய அவர், ‘காதல் கதை’ என்ற திரைப்படத்தை இயக்கினார். பின்னர், 2017ல் ‘ஒரு இயக்குனரின் காதல் டைரி’ எனும் படத்தையும் இயக்கினார். இவரது திரைப்படங்களில் பெரும்பாலும் சமூக விமர்சனங்கள், காதல், கலாச்சார முரண்கள் போன்ற முக்கியமான கருப்பொருள்கள் இடம்பெற்று வந்தன.
தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் திரை உலகுக்கு ஏற்ற வித்தியாசமான பயணத்தை மேற்கொண்ட வேலு பிரபாகரன், முதலில் பி. ஜெயாதேவி என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர், 2017ம் ஆண்டு, தன்னைவிட 25 வயது இளைய நடிகை ஷிர்லே தாஸ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர் தான் இயக்கிய ‘காதல் கதை’ படத்தில் நடித்த ஷிர்லே தாஸுடன் ஏற்பட்ட உறவு, திருமணமாக மாறியதாக கூறப்படுகிறது.
Read more: “இரண்டு வருட ஆயுள் போய்விட்டது” கூலி படத்திற்கு ரூ.50 கோடி சம்பளம்.. மனம் திறந்த லோகேஷ் கனகராஜ்..!