உத்தரபிரதேசம் மாநிலம் காஜியாபாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வரக்கூடிய சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியை காதலிப்பதாக கூறி இளைஞன் தன் வலையில் சிக்க வைத்துள்ளார். இந்த நிலையில் பள்ளி விடுமுறை நாளில் வீட்டில் தனியாக இருந்த சிறுமி தனது வீட்டுக்கு வருமாறு இன்ஸ்டாகிராம் நண்பருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சிறுமியின் அழைப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இளைஞன் மூன்று நண்பர்களுடன் சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளான். தனது நண்பன் வந்து விட்டான் என்ற ஆர்வத்தில் கதவை திறந்த சிறுமி நண்பனுடன் மேலும் 3 சிறுவர்கள் நின்று கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் உள்ளே நுழைந்த நான்கு பேரும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
திடீரென வீட்டிற்கு வந்த தாய் வீட்டுக்குள் மகள் இருந்த நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக தன் மகளை வெளியே இழுத்து வந்தார். பிறகு அந்த நான்கு சிறுவர்களையும் அதே அறையில் பூட்டிவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுவர்களை கைது செய்தனர். பலாத்காரத்தில் ஈடுபட்ட நான்கு பேரில் மூன்று பேர் மாணவியுடன் படிக்கும் மாணவர்கள் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: நடிகரும், இயக்குநருமான வேலு பிரபாகரன் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!!