இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு EPFO (Employees’ Provident Fund Organisation) எனப்படும் வருங்கால வைப்பு நிதி திட்டம் மிக முக்கியமான சேமிப்பு யோசனையாக உள்ளது. மாதா மாதம் ஊழியர் மற்றும் நிறுவனங்களால் பங்களிப்பு செய்யப்பட்டு சேமிக்கப்படும் இந்த தொகை, ஓய்வு பெற்ற பிறகு நிதி பாதுகாப்பாக பயன்படுகிறது.
தற்போது, EPFO அமைப்பு ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உள்ள விதிமுறைகளின்படி, ஒருவரது பிஎஃப் தொகையை முழுமையாக பெறுவது பணி ஓய்விற்கு பின் அல்லது இரண்டு மாதங்களுக்கு மேலாக வேலை இல்லாத நிலையில் மட்டுமே சாத்தியமாகிறது.
ஆனால் புதிய யோசனையின் கீழ் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை, பிஎஃப் கணக்கில் உள்ள முழுத் தொகையையும் எடுக்கும் உரிமையை வழங்குவது பற்றி EPFO ஆலோசித்து வருகிறது. இதற்கு பதிலாக, மொத்த தொகையின் 60% வரை மட்டுமே எடுக்க அனுமதிக்கலாமா என்ற ஆலோசனையும் நடந்து வருகிறது.
மக்களுக்கு பலனா? இல்லை சிக்கலா? இந்த யோசனை அமலுக்கு வந்தால், பணியாளர்களுக்கு நடுவைநிலைச் செலவுகள், வீட்டு கட்டுமானம், மருத்துவ அவசரங்கள் போன்ற தேவைகளுக்காக பெரிய தொகையை எளிதாக பெறலாம். ஆனால் இது, ஓய்வுக்குப் பின் அவர்களுக்கு உள்ள நிதி பாதுகாப்பை பாதிக்கக்கூடும். ஏனெனில் EPF திட்டம் ஓய்வுக்கால நலத்திற்கே உருவாக்கப்பட்டது.
இதுடன் மேலும் சில புதிய வசதிகளும் EPFO 3.0 திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன. யுபிஐ மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் வசதியும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த EPFO அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.
EPFO அமைப்பு, வருங்கால நலத்திற்கான திட்டத்தை இப்போது நடுவைநிலை நிதி தேவை உள்ளவர்களுக்கும் திறந்துவைக்க முயலுகிறது. இது ஒரு பக்கத்தில் மக்களுக்கு நன்மை தரலாம், ஆனால் மற்றொரு பக்கம் ஓய்வு கால நிதி பாதுகாப்புக்கு ஆபத்தாக அமைய வாய்ப்பும் உள்ளது. புதிய திட்டம் தொடர்பாக அரசு எப்போது அறிவிப்பு தருகிறது என்பதையே அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Read more: தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை…! விண்ணப்பிக்க ஜூலை 31-ம் தேதி கடைசி நாள்…!