இயக்குநர் வேலு பிரபாகரன் உடல் நலக் குறைவால் காலமானார். சென்னை தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மதியம் 12.30 மணிக்கு உயிரிழந்ததாக செய்தி வெளியாகின. ஆனால் அவர் உயிரிழக்க வில்லை.. வெண்டிலேட்டர் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக குடும்பத்தினர் விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் அவர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக வாழ்க்கையைத் தொடங்கியவர் வேலு பிரபாகரன். பின்னர் இயக்குநராகவும், நடிகராகவும் உருவெடுத்தார். 1989-ல் ‘நாளைய மனிதன்’ படத்தை முதன்முதலில் இயக்கினார். அதன் தொடர்ச்சியாக 1990ல் ‘அதிசய மனிதன்’ என்ற படத்தை இயக்கினார். இவை 2 வென்றும் ஹிட் ஆனது.
தொடர்ந்து, ஆர்.கே. செல்வமணி தயாரித்த ‘அசுரன்’, ‘ராஜாகிளி’ ஆகிய படங்களை இயக்கினார். ஆனால், இந்த இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தன. பின்னர் அருண் பாண்டியன் நடித்த ‘கடவுள்’, நெப்போலியன் நடித்த ‘சிவன்’, மற்றும் சத்யராஜ் நடித்த ‘புரட்சிக்காரன்’ ஆகிய படங்களை இயக்கினார். ஆனால் அவை எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. இவரது திரைப்படங்களில் பெரும்பாலும் சமூக விமர்சனங்கள், காதல், கலாச்சார முரண்கள் போன்ற முக்கியமான கருப்பொருள்கள் இடம்பெற்று வந்தன.
தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் திரை உலகுக்கு ஏற்ற வித்தியாசமான பயணத்தை மேற்கொண்ட வேலு பிரபாகரன், பி ஜெயாதேவி என்பவரை முதன்முதலில் திருமணம் செய்துகொண்டார். அதன்பின்னர் கடந்த 2017ல் ஆண்டு தன் 60வது வயதில் தன்னை விட 25 வயது குறைவான நடிகை ஷிர்லே தாஸ் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். வேலு பிரபாகரன். நடிகை ஷிர்லே தாஸ், வேலு பிரபாகரன் உடன் ‘காதல் கதை’ என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்போது மலர்ந்த காதலை அடுத்து 60வது வயதில் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இது அப்போது பேசுபொருள் ஆனது.
Read more: இனி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிஎஃப் தொகையை எடுக்கலாம்.. EPFO விதிகளில் வரும் அதிரடி மாற்றம்..!!