தாய்லாந்தில் ஒரு பெரிய பாலியல் மற்றும் மிரட்டல் ஊழல் வெளிவந்துள்ளது, இதில் விலாவன் எம்சாவத் என்ற பெண் பல மூத்த புத்த துறவிகளை தனது வலையில் சிக்க வைத்துள்ளார். அவர் துறவிகளுடன் உடலுறவு கொண்டதாகவும், பின்னர் தனிப்பட்ட வீடியோக்களைக் காட்டி அவர்களை மிரட்டி அவர்களிடம் இருந்து பெரும் தொகையை மிரட்டி பணம் பறித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
விலாவன் அம்சவத் யார்? விலாவன் அம்சவத் என்ற 30 வயது பெண், பாங்காக்கிற்கு அருகிலுள்ள நோந்தபுரியில் உள்ள அவரது ஆடம்பரமான வீட்டில் கைது செய்யப்பட்டார். அவர் சமூக ஊடகங்கள் மூலம் துறவிகளைத் தொடர்புகொண்டு அவர்களை சிக்க வைப்பதாக போலீசார் தெரிவித்தனர். அவர் மீது மிரட்டல், பணமோசடி மற்றும் சட்டவிரோத சொத்துக்களை வைத்திருத்தல் ஆகிய வழக்குகள் போடப்பட்டுள்ளன.
80,000 நிர்வாண படங்கள்: விலாவனின் தொலைபேசி மற்றும் வீட்டில் இருந்து 80,000 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர், அதில் அவர் பல புத்த துறவிகளுடன் உடலுறவு கொள்வது போல் தெரிகிறது. இந்த வீடியோக்களைப் பயன்படுத்தி துறவிகளிடமிருந்து பணம் பறித்ததாக கூறப்படுகிறது. அறிக்கையின்படி, அவர் மூன்று ஆண்டுகளில் சுமார் 385 மில்லியன் தாய் பாட் (சுமார் ₹ 102 கோடி) மோசடி செய்துள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெய்லி ஸ்டார் செய்தியின்படி, மேலும் அந்த பெண், தான் ஒரு துறவி மூலம் குழந்தை பெற்றதாகவும் கூறியுள்ளார். தாய்லாந்தில் கடந்த ஜூன் மாதம் பாங்காக்கில் வாட் திரி தோட்சதெப் மடாலயத்தின் புத்த மடாதிபதி திடீரென பதவியை விட்டு வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு பெண்ணால் மிரட்டப்பட்டதால் அந்த புத்த துறவி தனது பதவியை விட்டு விலகினார். மேலும் அவர் மாயமானார். இந்த வழக்கு தொடர்பான விசாணையில்தான் விலாவன் எம்சாவத்தின் மோசாடி வெளிவந்தது.
தாய்லாந்தின் மத்திய புலனாய்வுப் பிரிவு, இந்த வழக்கில் குறைந்தது 9 மூத்த துறவிகள் தங்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறியது. சிலர் தங்களை மறைத்துக்கொண்டனர். இந்த சம்பவம் முழு பௌத்த சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தாய்லாந்தின் பிரபல எழுத்தாளர் சனிட்சுதா ஏகாச்சாய், இந்த வழக்கு பெண்ணின் தவறு மட்டுமல்ல, முழு மத அமைப்பின் பலவீனத்தையும் அம்பலப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.
Readmore: அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 70% குறைவை சந்திக்க நேரிடும்!. நிபுணர்கள் கருத்து!