மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. ஷாக்கில் நகைப்பிரியர்கள்..

gold shopping indian gold jewellery with shopping bag 1036975 240891

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


ஜூலை மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்தது..

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.. அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை, ரூ. 60 உயர்ந்து ரூ.9,170க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.126-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,26,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : அஞ்சல்துறை ஓய்வூதியர்களுக்கு 28-ம் தேதி குறைதீர்ப்பு முகாம்…! முழு விவரம் இதோ

RUPA

Next Post

தினமும் இந்த 5 உடற்பயிற்சியை செய்தால் போதும்.. ஃபேட்டி லிவர் பிரச்சனையே வராது.. முழு ஃபிட்டாக இருப்பீங்க..

Sat Jul 19 , 2025
கொழுப்பு கல்லீரல் அதாவது ஃபேட்டி லிவர் (Fatty Liver) என்பது வெறும் கல்லீரல் பிரச்சனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. உண்மையில், கல்லீரல் பாதிப்பு என்பது இதய ஆரோக்கியத்திற்கும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கும் ஒரு எச்சரிக்கை மணியாகும். சிலர் இது கல்லீரலில் உள்ள பாதிப்பில்லாத கொழுப்பு என்றும், இது எந்தத் தீங்கும் ஏற்படுத்தாது என்றும் நினைக்கிறார்கள், ஆனால் அது அப்படியல்ல. உண்மையில், மது அல்லாத […]
152203906 1

You May Like