உடல்நலக்குறைவால் காலமான மு.க முத்துவின் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன், மு.க முத்து இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. ஏற்கனவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்தார்.. இன்று காலை 8 மணியளவில் அவரின் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முக முத்துவின் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.. சென்னை ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு மாலை அணிவித்துர் இறுதி அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.. அவருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.பி, தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் இறுதி அஞ்சலி செலுத்தினார்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி கனிமொழி ஆகியோரும் விரைவில் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது..
மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கவிருந்த பல நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
முன்னாள் முதல்வர் கருணாநிதி – பத்மாவதி தம்பதிக்கு பிறந்தவர் மு.க முத்து.. மு.க. முத்துவின் தாயார் பத்மாவதி, பிரபல பாடகர் சிதம்பரம் ஜெயராமனின் சகோதரி ஆவார். பல திரைப்படங்களில் நடித்துள்ள மு.க முத்து, சிறந்த பாடகராகவும் இருந்தார். 1970களில் அவர் பல படங்களில் நடித்துள்ளார். பிள்ளையோ பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர், பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு, இங்கும் மனிதர்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்தப் படங்களில் சில பாடல்களையும் பாடியுள்ளார்.. எம்.ஜி.ஆருக்கு போட்டியாக கொண்டுவரப்பட்டவர் என்று அப்போது பேசப்பட்டது..
ஆனால் அவரின் திரை வாழ்க்கை உச்சம் பெறவில்லை.. அவரின் திறமைகளுக்கு ஏற்ற இடத்தை அவர் பெறவில்லை.. இதனிடையே மு.க முத்துவுக்கும் கருணாநிதிக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.. ஒருகட்டத்தில் அவர் அதிமுகவில் இணைந்தார். இருப்பினும், முத்துவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போன பிறகு தந்தையும் மகனும் 2009-ல் மீண்டும் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : #Breaking : கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து உடல்நலக்குறைவால் காலமானார்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்..