“தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை” முதல் பரிசு ரூ.1 லட்சம் வழங்கப்படும்…! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்…?

Mk Stalin Tn Govt 2025

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றவுடன் “தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை” விளையாட்டு போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. 2025-26ம் ஆண்டில் நடத்தப்படவிருக்கும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பல்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 37 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.


மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3,000/- மும், இரண்டாம் பரிசாக ரூ.2,000/- மும், மூன்றாம் பரிசாக ரூ.1,000/-மும், சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்படவுள்ளன. மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1,00,000/- மும், இரண்டாம் பரிசாக ரூ.75,000/- மும், மூன்றாம் பரிசாக ரூ.50,000/- மும் வழங்கப்படும். குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75,000/- மும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50,000/-மும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25,000/-மும் பரிசாக வழங்கப்பட உள்ளது. இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள் மூலம் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும்.

6 முதல் 12 வகுப்பு வரை மட்டும், 01.01.2007 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும், கல்லூரிப் பிரிவிற்குட்பட்டவர்களுக்கு அதாவது 25 வயதிற்குட்பட்டவர்கள் 01.07.2000 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும்). பொதுப்பிரிவு (15 வயது முதல் 35 வயது வரை) 15 வயது எனில் (01.01.2010 அன்றோ அல்லது அதற்கு முன்னர் பிறந்திருக்க வேண்டும்), 35 வயது எனில் (01.01.1990 அன்று அல்லது அதற்கு பின் பிறந்திருக்க வேண்டும்). அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களான நிரந்தரப் பணியாளர்களும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க http://sdat.tn.gov.in (w) http://cmtrophy.sdat.in என்ற இணையதள முகவரி மூலம் முன்பதிவு செய்திட வேண்டும். மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திட கடைசி நாள் 16.08.2025 மாலை 6.00 மணி ஆகும். இணையதளம் மூலம் பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும்.

Read more: 350 ராணிகள், 88 குழந்தைகளுடன் வாழ்ந்த மன்னர்!. கிரிக்கெட் வீரர்; விமானம் வாங்கிய முதல் இந்தியர்!. பல ரெக்கார்டுகளுக்கு சொந்தக்காரர்!.

Vignesh

Next Post

அரிசி மாவை இப்படி அப்ளை பண்ணினால் சருமம் பிரைட்டாகும்!. கொரியா, தாய்லாந்து பெண்களின் ரகசியம் இதுதான்!.

Sun Jul 20 , 2025
எல்லோரும் தங்கள் சருமம் பளபளப்பாகவும், மென்மையாகவும், இளமையாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் வயது அதிகரிப்பு, மன அழுத்தம், மோசமான உணவுப் பழக்கம் மற்றும் மாசுபாடு காரணமாக, சருமம் காலத்திற்கு முன்பே வயதானதாகத் தோன்றத் தொடங்குகிறது. ஆனால், கொரியா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து நாட்டுப் பெண்கள் தங்கள் அழகைப் பாதுகாப்பதில் தனி கவனம் செலுத்துவார்கள். இதற்காக அவர்கள் பல தலைமுறைகளாகப் பயன்படுத்தி வரும் ஒரு பாரம்பரிய அழகு இரகசியம் […]
face tips 11zon

You May Like