ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது.
இத்தாலியில் ஜிடி 4 கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாவது ரேஸில் நடிகர் அஜித் குமாரும் பங்கேற்றார். இந்த கார் பந்தயத்தில் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது. பந்தயத்தில் முன்னால் சென்ற கார் திடீரென டிராக்கின் குறுக்கே நின்றதால் அதன் மீது அஜித்தின் கார் மோதியது. விபத்தில் அஜித் காரின் இடதுபுற முன்பகுதி உடைந்து சேதமடைந்தது.
இருப்பினும் இதில் காரில் இருந்த அஜித்திற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை எனத் தகவல் தெரியவந்துள்ளது. அவர் தனது காரில் இருந்து வெளியே நடந்து வரும் காட்சிகள் பதிவாகியுள்ளது. விபத்தில் அஜித் குமார் சிக்கியதில் அவரது கார் சேதமடைந்தது காரணமாக இந்த ரேசில் மட்டும் அவர் விலகினார். சர்க்யூட்டில் சிதறிக் கிடந்த கார் பாகங்களை அகற்றிக் கொண்டிருந்த ஊழியர்களுடன் இணைந்து அஜித்குமாரும் இணைந்து வேகமாக பாகங்களை அப்புறப்படுத்தினார். விபத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
அஜித் குமாரின் கார் இதற்கு முன்பு நடந்த சில ரேஸ்களிலும் விபத்தில் சிக்கி இருக்கிறது. இந்நிலையில் தற்போது நடக்கும் GT 4 ஐரோப்பிய சீரிஸ் ரேஸிலும் அஜித்குமாரின் ரேஸ் கார் விபத்தில் சிக்கி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நடிகர் அஜித் குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே 64 படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
Read more: Alert: கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை…!