சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி விளையாடிய வேளாண்துறை அமைச்சர்.. ராஜினாமா செய்ய எதிர்கட்சிகள் வலியுறுத்தல்..!!

Maharashtra miniter rummy

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் இருந்துவருகிறார். மேலும், கூட்டணியில் இருக்கும் இரு கட்சிகளும் ஆட்சியில் அங்கம் வகிக்கின்றன. அதன்படி, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸில் இருக்கும் மாணிக்ராவ் கோகடே வேளாண் துறை அமைச்சராக இருந்து வருகிறார். தற்போது அம்மாநிலத்தில் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றுவரும் நிலையில், வேளாண்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடே சட்டமன்றத்தினுள் அமர்ந்துகொண்டு ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார்.


மாணிக்ராவ் கோகடே தனது செல்போனில் ரம்மி விளையாடுவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிா்க்கட்சிகள், விவசாயிகளின் மீது அரசு அக்கறையின்றி செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளன.

இந்த வீடியோவை சரத்பவார் தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த ரோஹித் பவார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, “எண்ணற்ற வேளாண் பிரச்சனைகள் நிலுவையில் உள்ளன. ஒவ்வொரு நாளும் மாநிலத்தில் எட்டு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். வேளாண் அமைச்சர் எதுவும் செய்வதற்கு இன்றி, ரம்மி விளையாடி கொண்டிருக்கிறார்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமைச்சா் கோகடே, ‘சட்டப்பேரவையில் நடந்த விவாதங்களை பாா்க்க யூடியூபை திறக்க முற்பட்டபோது, கைப்பேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ரம்மி விளையாட்டு செயலி திறந்துவிட்டது. அதை நான் தவிா்க்க முயன்றேன்; ரம்மி விளையாடவில்லை. அவை ஒத்திவைக்கப்பட்டிருந்த நேரத்தில்தான் இந்த சம்பவம் நடந்தது’ என்று தெரிவித்தார். இந்த விவகாரம் பூதாகரமாய் வெடித்த நிலையில் அமைச்சா் கோகடே பதவி விலக வேண்டும் எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Read more: வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. சென்னையில் பார்கிங் கட்டணம் ரத்து..!! – மாநகராட்சி அறிவிப்பு

English Summary

Agriculture Minister who played online rummy in the Assembly.. Opposition parties demand his resignation..!!

Next Post

#Flash : ஓரணியில் தமிழ்நாடு.. மக்களிடம் OTP பெற இடைக்கால தடை.. உயர்நீதிமன்றம் அதிரடி..

Mon Jul 21 , 2025
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை நடத்தலாம், ஆனால் மக்களிடம் இருந்து ஓடிபி பெற இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.. ஓரணி தமிழ்நாடு என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கையை திமுக நடத்தி வருகிறது. இந்த உறுப்பினர் சேர்க்கையின் போது, ஆதார் எண்ணை பெற்று ஓடிபி பெறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.. இது தனிமனித உரிமை மீறல் எனவும், சட்டவிரோதமாக ஆதார் விவரங்களை சேகரிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை […]
collage 1752899455 1

You May Like