இரண்டு முறை ஆசிய சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற பிரணதி நாயக், ஹங்கேரியின் சோம்பத்தேலியில் நடைபெற்ற உலக சேலஞ்ச் கோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலம் வென்றார். இதன் மூலம் ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக இணைந்தார்.
பிரணதி நாயக் ஒரே இந்தியப் பெண்ணாக அந்த போட்டியில் சாதித்தார். இது குறித்து தேசிய பயிற்சியாளர் அசோக் மிஸ்ரா கூறுகையில், “இது ஒரு நல்ல இறுதி மற்றும் ஆசிய விளையாட்டுகளுக்கு முன்னதாக அவரது நம்பிக்கையை அதிகரிக்கும் எனவும், ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தயார்படுத்திக்கொள்ள எங்களுக்கு போதுமான நாட்கள் உள்ளன என்றும்” கூறினார்.