நோட்..! வெளியானது குரூப்-4 தேர்வுக்கான விடைத்தாள்…! எப்படி பார்ப்பது…?

group 2 tnpsc 2025

குரூப்-4 தேர்வுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி-யின் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 3,935 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு, கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வை 13.48 லட்சம் பேர் எழுதினர். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 3.935 குரூப் 4 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான தேர்வு முடிவுகள் அடுத்த மூன்று மாதங்களில் வெளியிடப்படும்.


இந்நிலையில், தேர்வுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி-யின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) நேற்று வெளியிடப்பட்டன. இதில் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் உரிய ஆவணங்களுடன் வரும் 28-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 7 தேர்வுகள் அறிவிக்கப்பட்டு, இதில் 5 தேர்வுகள் நடைபெற்றுள்ளன. மேலும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ போன்ற தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது. விரைவில் அதற்கான தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

Alert: மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்...! மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை...!

Tue Jul 22 , 2025
இன்று, நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தெற்கு ஒடிசா, அதை ஒட்டிய பகுதிகள் மற்றும் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகின்றன. இதன் காரணமாக இன்று முதல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று, நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை […]
cyclone rain 2025

You May Like