ஒரே நாளில் இரண்டு ஏர் இந்தியா விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு விமானப் பயணங்களின் அச்சத்தையும், ஏர் இந்தியா சேவையின் செயல்முறைகளையும் மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளன.
நேற்று மாலை டெல்லியில் இருந்து கொல்கத்தா செல்லும் ஏர் இந்தியா விமானம், மணிக்கு 155 கி.மீ வேகத்தில் ஓடுபாதையில் பறந்து கொண்டிருந்தபோது தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால் ரத்து செய்யப்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் 160 பயணிகளுடன் புறப்படவிருந்த விமானம். புறப்படுவதில் ஏற்பட்ட இடையூறுகளைத் தொடர்ந்து அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர்.
ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ஜூலை 21, 2025 அன்று டெல்லியில் இருந்து கொல்கத்தாவிற்கு இயக்கப்படும் AI2403 விமானம், புறப்படும் போது கண்டறியப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று மாலையில் புறப்படும்படி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த எதிர்பாராத இடையூறு காரணமாக பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மனதார வருந்துகிறோம்.
ஏர் இந்தியாவில், எங்கள் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முதன்மையான முன்னுரிமையாக உள்ளது.” என்றார். மற்றொரு சம்பவத்தில், ஜூலை 21 ஆம் தேதி, கொச்சியிலிருந்து மும்பைக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம், கனமழையின் மத்தியில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் சறுக்கியது. விமானிகளால் விரைவாகக் கட்டுப்படுத்தப்பட்டது. விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இருந்தனர், பின்னர் அவர்கள் விமானத்திலிருந்து பத்திரமாக இறக்கிவிடப்பட்டனர்.
ஒரே நாளில் நடந்த இந்த இரண்டு சம்பவங்களும் விமானப் பயணங்களில் ஏற்படும் அச்சத்தையும், ஏர் இந்தியா சேவையின் செயல்முறைகளையும் மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளன. தொடர்ந்து மழையால் பாதிக்கப்படும் நகரங்களில் விமான சேவைகளுக்கு மேலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்று விமான பயணிகள் வலியுறுத்துகின்றன.
Read more: நோட்..! வெளியானது குரூப்-4 தேர்வுக்கான விடைத்தாள்…! எப்படி பார்ப்பது…?