TNPSC குரூப்-4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்…? விளக்கம் அளித்த தேர்வாணையம்…!

group 2 tnpsc 2025

குரூப்-4 தேர்வு முடிந்து அனைத்து தேர்வு மையங்களிலிருந்தும் விடைத்தாள் கட்டுகள் பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுவிட்டன என டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் 3,935 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு ஜூலை 12-ம் தேதி நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய இத்தேர்வை 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். இந்த சூழலில் சேலம் மாவட்டத்தில் தேர்வு மையம் ஒன்றில் குரூப்-4 விடைத்தாள் கட்டுகள் வைக்கப்பட்ட பெட்டி ஆங்காங்கே உடைக்கப்பட்டிருந்த நிலையில் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜூலை 12-ம் தேதி குரூப்-4 தேர்வு முடிந்து அனைத்து விடைத்​தாள்​களும் உரிய பாது​காப்பு நடை​முறை​களை பின்​பற்றி சீலிடப்பட்ட இரும்பு பெட்​டிகளில் டிஎன்​பிஎஸ்சி அலு​வல​கத்​துக்கு 13-ம் தேதி காலை பாது​காப்​பாக வரப்​பெற்​றன. இதில் எந்தவிதமான குளறு​படிகளும் நடக்​க​வில்​லை. விடைத்தாள்கள் அட்டை பெட்டிகளில் கொண்டுவரப்பட்டன என்ற செய்தி உண்மை அல்ல. விடைத்தாள்கள் அனைத்தும் இரும்பு பெட்டிகளில் வைத்து சீலிடப்பட்டு அவை டிஎன்பிஎஸ்சி அலுவலகம் வந்துசேரும் வரை 24 மணி நேரமும் நேரடியாக கண்காணிக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு கண்காணிப்பு கேமரா மூலமாகவும் கண்காணிக்கப்படுகிறது.

செய்திகளில் கொடுக்கப்பட்ட புகைப்படங்கள், பயன்படுத்தப்பட்ட காலி அட்டைப்பெட்டிகள் மற்றும் தேர்வுக்கு பயன்படுத்தப்பட்ட பின்னர் உபரியாக இருந்த வினாத்தாள்கள் அடங்கிய அட்டை பெட்டிகள் போன்றவை ஆகும். இவை தேர்வில் பயன்பட்டது போகமீதமுள்ள வினாத்தாள்கள் என்பதால் வழக்கமான நடைமுறையின்படி அந்தந்த மாவட்டங்களிலேயே வைக்கப்பட்டிருக்கும். தேர்வு நடைமுறைகள் முடிந்த பின்னர் அவை மாவட்ட கருவூலகங்கள் மூலமாக மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு குருப்-4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: 350 ராணிகள், 88 குழந்தைகளுடன் வாழ்ந்த மன்னர்!. கிரிக்கெட் வீரர்; விமானம் வாங்கிய முதல் இந்தியர்!. பல ரெக்கார்டுகளுக்கு சொந்தக்காரர்!.

Vignesh

Next Post

சூப்பர்...! 60 வயதுக்கு மேற்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு மாதம் ரூ.8,000...! மத்திய அரசு தகவல்...!

Wed Jul 23 , 2025
60 வயதுக்கு மேற்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.8,000 நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மக்களவையில் நேற்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலின் விவரம்: நாடு முழுவதும் தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கைத்தறி நெசவாளர்கள், பணியாளர்களின் நலன்களுக்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஆண்டுதோறும் ரூ.1 லட்சத்துக்கும் குறைவான வருவாய் கொண்ட 60 […]
money 2025 e1749486445504

You May Like